பால் பாக்கெட்டின் நிறம் சொல்லும் உண்மை என்ன?
பால் பாக்கெட்டின் நிறம் சொல்லும் உண்மை என்ன?
🍇 ஆவின் பால் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு பால் நிறுவனம் ஆகும். 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
🍐 பால் பாக்கெட் பலவண்ணமாக வருவதற்கு காரணம் அதில் அடைக்கப்பட்ட பால் என்ன வகையான தரம் என்று குறிக்கிறது. கொழுப்பு, மாவு, புரதம் எவ்வளவு உள்ளது என்று கூறுவதற்கு வண்ணம் உள்ளது.
🍇 அடுத்த முறை பால் வாங்கும் போது பாலின் தரம் என்ன என்று கேட்டு அல்லது அதில் அச்சிடப்பட்டிருப்பதை காணலாம்.
🍐 குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கொழுப்புச்சத்தை பொறுத்து உரிய நிற பால் வாங்கி பயன்படுத்தலாம். இதை அதிகம் சூடுபடுத்தவோ காய்ச்சவோ தேவையில்லை. ஏற்கனவே பாலை குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சிவிடுவதால் அதில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டுவிடுகிறது.
🍇 அதே நேரம் அதிக அளவு பால் வாங்கி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தாமல் அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இல்லையெனில் இதிலிருக்கும் புரதச்சத்து அழிந்துவிடும்.
பால் பதப்படுத்தும் முறை
🍼 பால் கொள்முதல் செய்யும் இடங்களில், முதலில் லாக்டோ மீட்டர் என்னும் கருவியை கொண்டு அதில் இருக்கும் தண்ணீரின் அளவை பரிசோதனை செய்கிறார்கள். இது பாலில் குறைந்திருக்கும் சத்துக்களின் அளவையும் கண்டறிகிறது.
👉 அதன் பிறகு பால் குளிரூட்டப்பட்டு பிறகு 16 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
🍼 பிறகு பாலில் இருக்கும் கசடுகள் வெளியேற்றப்படுகிறது. பால் 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு மாறி பெரிய கொள்கலனில் சேர்க்கப்படுகிறது.
👉 அதன் பிறகு படிப்படியாக பிளேட் ஹீட் எக்சேஞ்ச் (Plate heat exchange) எந்திரத்தின் மூலம் 76 டிகிரி வரை 15 நொடிகள் சூடேற்றப்பட்டு 5 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் குளிர்விக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தல் முறையையும் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டு கிருமிகள் வடிகட்டி நீக்கப்படுகிறது.
கொழுப்பு நீக்கும் முறை
💥 பாலை பதப்படுத்திய பிறகு அதிலிருக்கும் கொழுப்பை நீக்குகிறார்கள். பொதுவாகப் பாலில் உள்ள கொழுப்பானது 20 முதல் 25 மைக்ரான் அளவு வரை இருக்கும்.
💚 இதனால், பாலில் உள்ள கொழுப்பு தனியாகப் பிரியாமல், பாலுடன் கலந்து விடுவதோடு எளிதில் ஜீரணமாகும் தன்மையையும் பெறுகிறது.
💥 அதன் பிறகு கொழுப்பின் அளவுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தேவையான அளவுகளில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
💚 இவையே நீல நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம், பிங்க் நிறம் என்று கொழுப்பு சேர்ப்பதை பொறுத்து பிரித்து கடைகளில் விற்கப்படுகிறது.
பச்சை நிற பாக்கெட் பால்
🍀 இது நிலைப்படுத்தப்பட்ட பால். இதில் கொழுப்புச்சத்து சற்று அதிகம் உண்டு.
🍀 இதை இளம் வயதினர், நடுத்தர வயதில் இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம். 40 வயதுக்குட்பட்டவர்கள் வரை இதை எடுத்து கொள்ளலாம்.
🍀 100 கிராம் பாலில் 4.5 கிராம் அளவு கொழுப்புச் சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும், 4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 74 கிலோ கலோரியும் உண்டு.
ஆரஞ்சு நிற பாக்கெட் பால்
🍊 கொழுப்புச்சத்து நிறைந்த பால் இது. இதை பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் செய்யும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
🍊 பலரும் இவை அடர்த்தியாக இருக்கிறது என்று இதை அன்றாடம் பயன்படுத்துவது உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவிர்ப்பதே நல்லது.
🍊 அதிக கொழுப்புச்சத்து கொண்டிருப்பதால் இவை ஃபுல் க்ரீம் மில்க் என்றும் அழைக்கப்படுகிறது.
🍊 100 கிராம் பாலில் 6 கிராம் அளவு கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. 3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட், 740 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 904 கிலோ கலோரியும் உண்டு.
நீல நிற பாக்கெட் பால்
💙 இது சமன்படுத்தப்பட்ட பால் ஆகும். இவை எளிதில் ஜீரணமாகும் என்பதால் குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்களுக்கு ஏற்றது.
💙 இத்தகையோர் பாக்கெட் பால் பயன்படுத்துவதாக இருந்தால் நைஸ் பால் என்று அழைக்கப்படும் நீல நிற பாக்கெட்டை பயன்படுத்தினால் போதுமானது.
💙 100 கிராம் பாலில் 3 கிராம் அளவு கொழுப்புச்சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும், 4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 60 கிலோ கலோரியும் உண்டு.
பிங்க் நிற பாக்கெட் என்னும் டயட் பால்
🌺 உடல் குறைய நினைப்பவர்களும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த பாலை பயன்படுத்தலாம். அனைவருக்குமே ஏற்றது இந்த பால். ஏனெனில் இதில் குறைவான அளவு கொழுப்பு உள்ளது. அதனாலேயே இது டபுள் டோன்ட் மில்க் என்று அழைக்கப்படுகிறது.
🌺 100 கிராம் பாலில் 1.5 கிராம் அளவே கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. 3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட், 740 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 484 கிலோ கலோரியும் உண்டு.
🌺 கொழுப்பு சேரவே வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதை பயன்படுத்தலாம். இனி கடைகளில் வாங்கும் போது உங்களுக்கேற்ற பாலை வாங்குங்கள்.