Search This Blog

கோழியில்லாமலே கிடைக்கும் முட்டை..!


கோழியில்லாமலே கிடைக்கும் முட்டை..!
🐔 முட்டையின் வெள்ளைக்கருவிலுள்ள புரதம் நமக்கு ஊட்டம் தரக்கூடியது. இதனால்தான் பலரும் 'ஓவால்புமின்" என்ற புரதத்திற்காக முட்டையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்கின்றனர்.

🍳 ஆனால், ஓவால்புமினுக்காக, ஏராளமான கோழிகளை, பண்ணைகளில் வளர்க்க வேண்டி உள்ளது. முட்டை, முக்கால்வாசி இறைச்சி போக, மீதி எல்லாம் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கழிவுகளாக்கப்படுகின்றன.

🐔 இந்த அவலத்தைப் போக்க, தாவரங்கள் மூலமாகவே முட்டையில் உள்ள புரதத்தை வளர்த்து எடுக்க சில விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

🍳 அண்மையில் ஹெல்சிங்கி பல்கலை மற்றும் பின்லாந்தின் வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பூஞ்சையிலிருந்து ஓவால்புமின் புரதத்தை தயாரித்துள்ளனர்.

🐔 கோழியில் ஓவால்புமினை உற்பத்தி செய்ய உதவும் மரபணுவை எடுத்து, 'டிரைகோடெர்மாரீசி" என்ற பூஞ்சையில் புகுத்தி, விஞ்ஞானிகள் இதை சாதித்துள்ளனர்.

🍳 இதையடுத்து அந்த பூஞ்சை சுரந்த ஓவால்புமின் புரதத்தை சேகரித்து, ஒரு பொடியாகத் தயாரித்தனர். இந்தப் பொடியை சோதித்ததில், கோழி முட்டையின் வெள்ளைக் கரு பொடியைப் போலவே பல அம்சங்களைக் கொண்டிருந்தது.

🐔 பூஞ்சைப் பொடியை முட்டைப் பொடியைப் போலவே, தண்ணீர் கலந்து அடித்து கிரீம் போலத் தயாரிக்க முடிந்தது. பூஞ்சையில் விளையும் ஓவால்புமின் புரதத்தை இந்த உலகம் உணவாக ஏற்றுக்கொண்டால் என்னவாகும்?

🍳 கோழிப்பண்ணை மற்றும் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் 90 சதவீதம் மிச்சமாகும். பண்ணைத் தொழில்களால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களில் 3, 0-55 சதவீதம் தடுக்கப்படும். மொத்தத்தில் பூஞ்சைப் புரதம் பூமியை மாசு குறைந்ததாக ஆக்கும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url