கிரானைட் என்றால் என்ன?
கிரானைட் என்றால் என்ன?
கிரானைட் தயாராவது எப்படி?
கிரானைட் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கிரானைட் தயாராவது எப்படி?
🌺 கிரானைட் பாறைகள், மலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடி வைத்து தகர்த்து எடுக்கப்படுகின்றன. முதலில் கிரானைட் கல்லின் அளவு திட்டமிடப்படுகிறது.
🌺 அப்போது தான், வெட்டும் போது கற்கள் வீணாவது தடுக்கப்படும். வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள், தேவையான அளவிற்கு மாற்றப்படுகின்றன.
🌺 வாட்டர் ஜெட் கட்டிங் என்ற தொழில்நுட்பம் வெட்டுவதற்கு பயன்படுகிறது.
🌺 சரியான அளவில், வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட்டின் ஓரங்கள், பக்கவாட்டுப் பகுதிகள் சரி செய்யப்பட்டு செப்பனிடப்படும். இது கல் குவாரியிலேயே நடக்கும்.
🌺 பின், மொத்தமாக இருக்கும் கிரானைட்டுகள் தேவையான எண்ணிக்கையில், சரியான அளவில் கேலிப்ரேஷன் முறையில் சிறு சிறு துண்டுகளாக்கப்படும். கற்கள் பாலிஷ் செய்யப்படும்.
🌺 பின் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரத்தின் உதவியுடன், கற்களின் பரிமாணங்கள் சரி செய்யப்படும். இதை ஆஷ்லர் முறை என்பர். பின் கற்கள் விற்பனைக்கு தயாராகும்.
கிரானைட் எப்படி உருவாகிறது?
🐚 புவியின் மேல் ஓட்டில், இயற்கையாக உருவாகும் மிக உறுதியான கற்பாறை தான் கிரானைட். பூமியின் அடியில் உள்ள மாக்மா என்ற கற்குழம்பு குளிர்வடைந்து புளுட்டோனிக் பாறை உருவாகிறது.
🐚 இதுவே நாளடைவில் கிரானைட்டாக மாறுகிறது. பூமிக்குள் 1.5 கி.மீ., முதல் 50 கி.மீ., ஆழத்துக்குள் இம்மாற்றம் நடக்கிறது.
🐚 இப்பாறைகள், மிக கடினமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். கிடைக்கும் இடங்களை பொறுத்து, கிரானைட்டின் தன்மை அமைகிறது.
🐚 இதை வைத்து, தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயிக்கப்படுகிறது. கட்டிடங்கள் கட்ட கிரானைட் பயன்படுகிறது. கிரானைட்டில், குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், மைக்கா ஆகிய தாதுக்கள் உள்ளன.
கிரானைட் கற்களின் பண்புகள் :
💎 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகள், பாறைகளை உருக்கி, திரவ நிலையில் குழம்புகளாக மாற்றின.
💎 நாளடைவில் இந்த குழம்பு, குளிர்ந்து கடினத் தன்மையுடைய எரிமலை பாறைகளாக மாறின.
💎 இந்த பாறைகள் பல வகைப்படும். அதில் ஒன்று தான் கிரானைட். படிகங்களாலும், களிமண் பாறைகளாலும் இந்த கிரானைட், தனித்தன்மை, வடிவம் பெற்றன. மைக்கா மற்றும் சில தாதுக்கள் இதில் உள்ளன. இந்த தாதுக்களைப் பொறுத்து, கிரானைட்டின் நிறங்கள் மாறுகின்றன.
💎 இவற்றைப் பொறுத்தே, வலிமையும், நீடித்து உழைக்கும் தன்மையும் பெற்று, மற்றவற்றிலிருந்து தனித்துவம் பெறுகின்றன.
🌀 உயர்தர பாலிஷ் செய்த பின்னும், கிரானைட்டின் சில இடங்கள் டல்லாக (Dull) இருக்கும். பார்ப்பதற்கு வாட்டர் மார்க் போல் தெரியும். இதை மந்தமான புள்ளிகள் என்பர்.
🌀 கிரானைட்டின் மற்றொரு பண்பு, குழி விழுதல். கிரானைட்டில் உள்ள சிறிய தாதுப் பொருட்கள், பாலிஷ் செய்யும் போதும், வேறு சில காரணங்களாலும் நீங்கி விடும்.
🌀 அப்போது, அந்த இடத்தில் சிறு குழி விழும். இதையும் சரி செய்யும் தொழில்நுட்பங்கள் தற்போது உள்ளன.
🌀 பாறைக் குழம்புகள், குளிர்ந்து தனி கல்லாக மாறும் போது, அதில் சில துவாரங்கள் இயற்கையாக உருவாகின்றன.
🌀 இந்த துவாரங்கள், கிரானைட்டில் இருக்கும். ஆனால், நாளடைவில் இந்த துவாரங்கள், பெரிதாவதோ, சுருங்குவதோ கிடையாது.
கிரானைட்டில் இருப்பது என்ன?
🎈 கிரானைட் பாறைகளில், களிமண் பாறைத் தனிமங்கள், படிகக்கல், கறுப்பு அப்ரகம் (பயோடைட்) ஆகியவை இதன் முதன்மை உட்பொருட்கள்.
🎈 களிமண் பாறைத் தனிமங்கள், 65 முதல் 90 சதவீதமும், படிகக்கல் 10 முதல் 60 சதவீதமும், பயோடைட் 10 முதல் 15 சதவீதமும் இருக்கும்.
🎈 இது தவிர, வேறு சில வேதிப் பொருட்களும் இதில் உள்ளன. இவற்றை 2000க்கும் அதிகமான ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடித்தனர்.