நோய் நீக்கும் மூலிகைகள் 2:

நோய் நீக்கும் மூலிகைகள்:

1. சீதபேதி, நச்சு போன்றவற்றை சரிசெய்யும் மூலிகை எது?
கறிவேப்பிலை

2. கரிசலாங்கண்ணியின் வேறுப் பெயர்கள்?
கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்

3.கரிசலாங்கண்ணி எந்த நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது? இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலை

4.கண் பார்வையை தெளிவாக்கவும், நரையை போக்கவும் உதவும் மூலிகை எது?
கரிசலாங்கண்ணி

5. வாய்ப்புண்னையும், குடற்புண்ணையும் குணபடுத்தும் மூலிகை எது?
 மணித்தக்காளிக் கீரை

6. அகத்திக் கீரை ———- சார்ந்த நோய்களை குணமாக்கும்.
பல்

7. நினைவாற்றலை பெருக்க உதவும் மூலிகை?
வல்லாரை
8 வேப்பங்கொழுந்து காலையில் சாப்பிட்டால் ———— நீங்கும்.
மார்பு சளி

9. மூட்டு வலி நீக்கும் மூலிகை எது?
முடக்கற்றான்

10. முசுமுசுக்கை வேரினை பசும் பாலில் ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி பசும்பால், மிளகுப் பொடி, சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் ———— நீங்கும்.
இருமல்

Next Post Previous Post