நோய் நீக்கும் மூலிகைகள்
நோய் நீக்கும் மூலிகைகள்
- நச்சுக்கடிகளுக்கு நல்ல மூலிகை மருந்தாகப் பயன்படுவது எது? குப்பைமேனி
- குப்பைமேனி மூலிகையை எவ்வாறு சிறப்பிக்கிறோம்? ’மேனி துலங்க குப்பைமேனி’
- குப்பைமேனி இலையுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப்பூசினால் ———– நீங்கும். சொறி, சிரங்கு
- வயிறு தூய்மையாக்கவும், பசியெடுக்குவும் உதவும் மூலிகை எது? குப்பைமேனி
- வறண்ட நிலத்தாவரத்திற்கு எடுத்துக்காட்டு? கற்றாழை
- கற்றாழையில் —————– மருந்தாகப் பயன்படுகிறது. சோற்றுக் கற்றாழை
- கற்றாழைக்குக் ———— என்ற பெயரும் உண்டு. குமரி
- பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் கற்றாழையை ————- என்பர். “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு”
- முருங்கைப் பட்டையை அரைத்து தடவினால் ———— விரைவில் கூடும். எலும்பு முறிவு
- இரும்பு சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் மூலிகை எது? முருங்கை