உலகளாவிய தமிழர்- சிறப்பும், பெருமையும் – (பகுதி – 2) !!

1. எந்தெந்த நாடுகளில் இன்றும் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்? சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு

2. பரப்பளவில் சிறிய தீவு எது? ரியூனியன் தீவு

3. ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ———– ஆவர். தமிழர்கள்

4. தமிழர்கள் பிரெஞ்சுகாரர்களால் எந்தப் பகுதியிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக ரியூனியன் தீவில் குடியமர்த்தப்பட்டார்கள்.  புதுச்சேரி, காரைக்கால்

5. கோவில் திருவிழாக்களில் ———– எடுப்பதும், ———– இழுப்பதும் இன்றும் நடைபெற்று வருகின்றன. காவடி, தேர்

6. இலங்கையில் வாழும் தமிழர்களில் —————– விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.  95

7. தமிழ் ஆட்சிமொழியாகத் திகழும் நாடுகள்? இலங்கை, சிங்கப்பூர், மலேசியா

8. உலகெங்கும்  தமிழர் நடத்தி வரும் ஊடகங்கள் எவை?  அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள்

9.  தமிழர் எந்தெந்த நாடுகளில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்?  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்

10. குடியரசுத் தலைவர்களாகவும் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகள் எது? சிங்கப்பூர், மொரிசியசு

11. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது யாருடைய கூற்று? கணியன் பூங்குன்றனார்

Next Post Previous Post