Search This Blog

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை :

இளம் பிள்ளைகளை இதமாக வழிநடத்துவோம்..!

👪 பல குழந்தைகளின் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி, கல்லூரி முடித்து வரும்போது அப்பிள்ளைகளை வரவேற்கவோ, அன்புடன் பேசிச் சிற்றுண்டி தருவதற்கோ யாரும் இன்றித் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

👪 அவர்களின் உலகம் என்னும் புரியாத புதிருக்குள் நுழையும் வழியறியாமல் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். கூட்டுப் பறவைகளாய் அதுவரை வீட்டிற்குள் வளர்ந்த குழந்தைகள் பொது வெளிக்கு வர விரும்புகிறார்கள், அவர்களின் உளவியல், உடலியல் சிக்கல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு அவர்களைச் சரியாக வழிநடத்தத் தவறினால் அவர்களின் எதிர்காலமே பாழாகும் நிலை ஏற்படலாம்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை :

👪 பதின்பருவத்துக் குழந்தைகள் அன்புக்கும் தங்கள் பெற்றோர்களின் அங்கீகாரத்திற்கும் ஏங்குகிறார்கள். பல குழந்தைகளின் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி, கல்லூரி முடித்து வரும்போது அப்பிள்ளைகளை வரவேற்கவோ, அன்புடன் பேசிச் சிற்றுண்டி தருவதற்கோ யாரும் இன்றித் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமைக்குச் சமூக ஊடகங்கள் தீனியாய் அமைகின்றன. நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கதிகமான செல்போன் பயன்பாட்டிற்குள்ளாகிச் சமூக ஊடகங்களுக்குள் நுழைகிறார்கள்.

சமூக ஊடகங்களில் இன்றைய பிள்ளைகள் :

👪 முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர், டிக்டாக் கணக்குகளைத் தொடங்குகிறார்கள். இணையத்தின் மாய உலகில் அப்பிள்ளைகள் நுழைவது இப்படித்தான். சமூக ஊடகங்கள் மூலமாக அரும்பும் காதல் அவர்களைக் கவனத்துடன் படிக்கவிடாமல் வேறு திசை நோக்கித் திருப்புகிறது. அறிமுகம் இல்லாதவர்களிடம் தங்கள் வாழ்க்கையை துலைத்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் சமூக ஊடகங்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை துலைத்து விடுகிறார்கள். அவர்கள் வழி தவறுவதற்கு யார் காரணம்?

👪 பதின்பருவப் பிள்ளைகளின் சிறுநடவடிக்கைகளைக் கூட பெற்றோர்கள் கூர்ந்து கவனமாக நோக்க வேண்டும், பாதை தவறுவதாய் உணர்ந்தால் நம் செயல்கள்தான் நம் முகங்களாக அமைகின்றன என்று மென்மையான சொற்களால் அவர்களைத் திருத்த முயல வேண்டும்.

👪 அவர்களை அடிப்பதோ, அவர்களைக் கண்டபடி திட்டுவதிலோ பயனில்லை, வாழ்வின் மாயைகளை அவர்களுடன் பேசிப்பேசியே உணர்த்த முடியும். அவர்கள் செய்யும் செயல் அவர்களின் வாழ்வில் உண்டாக்கப் போகும் தீயவிளைவுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

👪 அவர்கள் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் வாழ்வைப் பாழாக்கும் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். விலையுயர்ந்த ஸ்மார்ட் செல்பேசிகளையும், விலையுயர்ந்த பைக்குகளையும் பெற்றோர்கள் அப்பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும்.

👪 அருகருகே இருந்தாலும் தண்டவாளங்கள் எந்தப் புள்ளியிலும் ஒன்று சேரமுடியாது. அவர்கள் நியாயப்படுத்தும் தவறுகள் பெற்றோர்களைக் காயப்படுத்தத்தான் செய்யும். அதனால் செய்த தவறுகளை நியாயப்படுத்தாமல் ஒத்துக்கொண்டு இனிமேல் செய்யாமல் இருப்பதற்கான நேர்மையை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

👪 மனத்தெளிவே அவர்களின் மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் ஒரே வழி. அத்தெளிவை அவர்களுக்கு உண்டாக்கி அல்லது விலக்கி, நல்லதை நோக்கி நகர்த்தப் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும்.

பிள்ளைகள் மீது நம் கனவை திணித்தல் :

👪 என்னால் முடியாமல் போன என் கனவுகளை என் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கக்கூடாது.

👪 அவர்களின் ஆர்வமறியாமல் நாம் முன்னிறுத்தும் லட்சியங்களே அப்பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு சேர்க்கின்றன. உறுத்திய கண்களால் உலகைப் பார்க்கும்போது எல்லாம் கலங்கலாகத்தான் இருக்கும், எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது, நம் பார்வையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அவர்களை நம்புவோம், வழி தவறும்போது நண்பர்களைப் போல் நாசுக்காய் அவர்களைத் திருத்துவோம்.

குறிப்பு :
நித்ரா தமிழ் அகராதியில் இருந்து

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url