நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது?
நட்பை போற்றும் தினமான நண்பர்கள் தினம் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை, நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் வரும் ஞாயிறு அன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறது. 1958-ம் ஆண்டு வேர்ல்டு பிரண்ட்ஷிப் குருசேட் அமைப்பு முதன்முதலில் நண்பர்கள் தினத்தை உருவாக்கியது. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று ஐநா சபையின் ஜெனரல் அசம்பிளி ஜூலை 30ம் தேதியை நண்பர்கள் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஓஹியோவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 8ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல ஓவ்வொரு நாட்டிலும் ஓவ்வொரு ஆண்டில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அர்ஜண்டீனா- ஜூலை 20
பொலீவியா - ஜூலை 23
பிரேசில் - ஜூலை 20
மார்சின் இரண்டாம் சனி
ஈக்வெடார்- ஜூலை 14
எஸ்டோனியா- ஜூலை 14
ஃபின்லாந்து- ஜூலை 30
மலேசியா ஆகஸ்ட் முதல் ஞாயிறு
மெக்ஸிகோ - ஜூலை 14
பாகிஸ்தான் - ஜூலை 19
ஸ்பெயின் - ஜூலை 20
உருகுவே - ஜூலை 20
யுனைடட் ஸ்டேட்ஸ்- பிப்ரவரி 15
வெனீசுலா - ஜூலை 14