Search This Blog

இராயப்பனூர் செல்லியம்மன் திருத்தேர் திருவிழா


ஸ்ரீ செல்லியம்மன் தேர் ஸ்ரீ அய்யனார் மாரியம்மன் திருத்தேர் திருவிழா

செல்லியம்மன் தேர் திருவிழா அழைப்பிதழ்




திருவிழாவின் சிறப்பு

  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக பிரம்மாண்டமான முறையில் தேர்த் திருவிழா நடைபெறும்.
  • செல்லியம்மன் தேர், அய்யனார் தேர் மற்றும் மாரியம்மன் தேர் என மூன்று தேர்களும் ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்களால் சங்கிலி வடம் பிடிக்கப்பட்டு வீதியுலா வரும்.
நிகழ்ச்சி நிரல்

              முதலில் காப்பு கட்டும் சில நாட்களுக்கு முன்பு மாரியம்மன் பாரதம் ஆரம்பிக்கப்படும். இது 11  அல்லது 14 என வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
  • முதல் நாள் காப்பு கட்டுதல் : காலை அனுக்ஞை , வாஷ்சாந்தி, யாகம் வளர்த்து அம்மனுக்கு காப்பு கட்டுதல்.
  • நான்காம், ஐந்தாம் நாள்:  ஸ்ரீ செல்லியம்மன் தேர் , ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிகள் திரு வீதிஉலா  நடைபெறும் 
  • ஆறாம் நாள் : காலை பால் குடம் எடுத்தல்  மாரியம்மனுக்கு  , சக்தி அழைத்து ஊரணி பொங்கல்  வைத்தல், மோடி எடுத்தல் , நடைபெறும், சுவாமிகள் திரு வீதிஉலா. இரவு கழுகு மரம் ஏறும் நிகழ்வு நடைபெறும். 
  • ஏழாம் நாள் : மதியம் கோட்டை இடித்தல் , ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு சக்தி அழைத்து ஊரணி பொங்கல் வைத்தல் , இரவு  சுவாமிகள் திரு வீதிஉலா நடைபெறும்.
  • எட்டாம் நாள் : ஸ்ரீ செல்லியம்மனுக்கு பால் குடம் எடுத்தல் , சக்தி அழைத்து ஊரணி பொங்கல் வைத்தல். சுவாமிகள் திரு வீதிஉலா  நடைபெறும்.
  • ஒன்பதாம் நாள் : காலை தீ மிதித்தல் , அலகு குத்துதல் , அக்னி கரகம் எடுத்தல் உருளைத்தன்டம் போடுதல், தொடர்ந்து மாலை திருத்தேர் வடம் பிடிக்கப்படும். இதன் சிறப்பாக  செல்லியம்மன் தேர், அய்யனார் தேர் மற்றும் மாரியம்மன் தேர் என மூன்று தேர்களும் ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு வீதியுலா வரும். 
  • பத்தாம் நாள்: மதியம் ஸ்ரீ செல்லியம்மன் தேர் , ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ  மாரியம்மன்  சுவாமிகள் மஞ்சள் நீராட்டு விழாவுடன்  திரு வீதிஉலா  நடைபெற்று  திருவிழா நிறைவு பெரும்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url