உலக பார்க்கின்சன் தினம் (Parkinson's day)
உலக பார்க்கின்சன் தினம் (Parkinson's day)
🌟 ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
🌟 ஜேம்ஸ் பார்க்கின்சன் (James Parkinson) 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பிறந்தார்.
🌟 இவர்தான் பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதல்முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார்.
🌟 இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans), முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்று பெயரிட்டார். பின்னாளில் இது 'பார்க்கின்சன் நோய்' என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.
🌟 முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் 1824ஆம் ஆண்டு மறைந்தார்.