தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (NSMD - National Safe Motherhood Day) ஏப்ரல் 11
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (NSMD - National Safe Motherhood Day) ஏப்ரல் 11
🤰 ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (NSMD - National Safe Motherhood Day) ஏப்ரல் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
🤰 கஸ்தூரிபாய் காந்தியின் பிறந்த தினத்தின் நினைவாக 2003ஆம் ஆண்டில் இந்திய அரசு ஏப்ரல் 11ஆம் தேதியை தேசிய பாதுகாப்பான தாய்மை தினமாக அறிவித்துள்ளது.
🤰 பெண்களின் சீரான உடல்நலம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு வசதிகள், பெண்களிடையே இரத்த சோகையை குறைத்தல், மருத்துவமனையில் குழந்தை பிறப்பு, பிறப்பிற்கு முன்பு மற்றும் பிறப்பிற்கு பின்பான உடல்நலம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.