பங்குனி உத்திர திருவிழா வரலாறு Panguni Uthiram History in Tamil:
பங்குனி உத்திர திருவிழா வரலாறு Panguni Uthiram History in Tamil:
தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதம் பங்குனி. 27 நட்சத்திரங்களில் பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம். இந்த இரண்டும் சேர்ந்து பௌர்ணமி திதியுடன் சேர்ந்து வரும் நன்னாளையே பங்குனி உத்திர திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
அரக்க குணங்கள் உள்ள அசுரர்களை அழிக்க முருக பெருமான், சிவபெருமான் மற்றும் உமாதேவியரிடம், ஆசீர்வாதம் வாங்கி விட்டு படைத் தலைவன் வீரப்பாகு தாரகாசுசனுடன் போரிடுவதற்கு செல்கின்றான்.
தாரகாசுரன் போட்டியிட்டு வெல்ல முடியாமல் தனது மாய வேலைகளுடாக வீரபாகு படையினரை தாக்கினான். இதனை அறிந்து கொண்ட நாரதர், முருக பெருமானிடம் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த முருக பெருமான் தாரகாசுரனை கடுமையாக தாக்குகின்றார்.
முருகப்பெருமான் தாக்குதலை எதிர் கொள்ள முடியாத தாரகாசுரன் எலியா மாறி மலைக்குள் ஒழிந்து கொண்டான். பிறகு முருகப்பெருமான் அவர்களுக்கு தன்னுடைய அன்னை வழங்கிய வேலினை மலை பகுதியில் எறிந்தார். மலை பகுதியானது இதன் மூலம் துகள்கள் ஆக மாறியது.
பிறகு மலையானது துகள்கள் ஆனதும் தரகாசூரன் வெளியில் வந்தார், இதன் மூலம் தாரகாசுரனை அழித்தார். மேலும் அவனின் தமயன் சூரபத்மன் ஆகிய இருவரையும் போரிட்டு அழித்தார். இந்த விஷயத்தினால் மகிழ்ச்சி அடைந்த தேவர் குல தலைவர் தனது மகளான தெய்வானையை முருக பெருமானுக்கு பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த நன்னாளே பங்குனி உத்திரம் எனப்பட்டது.
இந்த பங்குனி உத்திரம் ஆனது திருமண விரதம் மற்றும் கல்யாண விரதம் என்றும் அழைக்கப்படும். இந்த நாளன்று தான் சிவன்- பார்வதி, ராமர்- சீதைக்கும், முருகன் – தெய்வானைக்கும், பெருமாள் – மகலாட்சுமி போன்றோர்களுக்கு திருமணம் நடைபெற்றது.