Search This Blog

இந்தியாவில் இல்லை 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம் ஸ்பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகை, சந்திர கிரகணம் ஒரே நாளில் Lunar Eclipse 2024 :

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் பார்க்க முடியுமா? , பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகை, சந்திர கிரகணம் ஒரே நாளில் Lunar Eclipse 2024 : 




சென்னை: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பங்குனி உத்திரம் நாளான மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த நாளில் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது.

இப்படி ஹோலி பண்டிகை நாளில் சந்திர கிரகணம் நிகழ்வது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதனால் இந்த சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மீன ராசியில் சூரியன் ராகு இணைந்திருக்க கன்னி ராசியில் சந்திரனும் கேதுவும் இணையும் நாளில் கேது கிரகஹஸ்த சந்திர கிரகணம் உருவாகிறது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. சூரிய சந்திர கிரகணங்கள் வானத்தில் தோன்றும் அதிசய நிகழ்வுகள்.


சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.


2024 ஆம் ஆண்டில் ஆண்டில் நான்கு கிரகணங்கள் ஏற்பட்ட உள்ளன. மார்ச் 25,2024ஆம் தேதியன்று பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 100 ஆண்டுகளுக்குப்பிறகு பங்குனி உத்திரம், ஹோலி கொண்டாடப்படும் நாளில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது.

இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை நீடிக்கும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 36 நிமிடங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம் (Penumbral) பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.


அதாவது இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் வழியாக மட்டுமே செல்லும். அப்போது சந்திரனின் ஒளி லேசாக மட்டுமே குறையும் என்று நாசா தெரிவித்துள்ளது.

 இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும்.


இந்திய நேரப்படி பகலில் சந்திர கிரகணம் நிகழ்வதால் அதை நாம் பார்க்க முடியாது.

 இந்தியாவில் தோஷ காலம் பொருந்தாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. பங்குனி உத்திர தினம் என்பதால் முருகன், சிவ ஆலயங்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெறும். சந்திர கிரகணத்தின் தொடர்ச்சியாக அடுத்த 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது.


ஏப்ரல் 8ஆம் தேதி, மீன ராசியில் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழும் சூரிய கிரகணம் என்பதால் இங்கு தெரியாது. மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும்.


செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி புதன்கிழமை சந்திர கிரகணம் நிகழப்போகிறது. இந்திய நேரப்படி பகல் 07.45 மணிக்கு கிரகணம் நிகழ உள்ளதால் இந்தியாவில் தெரியாது. மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.


அக்டோபர் 2,2024 சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதுவும் இந்தியாவில் தெரியாது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும். இந்த ஆண்டு 2 சந்திர கிரகணம், 2 சூரிய கிரகணங்கள் நிகழ்ந்தாலும் எதுவுமே இந்தியாவில் தெரியாது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url