மார்ச் 21- உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) :
மார்ச் 21- உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) :
உலக பொம்மலாட்ட தினம்
வரலாறு:
🎎 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக பொம்மலாட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
🎎 உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
🎎 உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நோக்கம்:
🎎 பொம்மலாட்டம் என்ற மரபுவழி கலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.
🎎 உலகம் முழுவதும் உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவித்தல்.
🎎 பொம்மலாட்ட கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஊக்குவித்தல்.
முக்கியத்துவம்:
🎎 இந்த கலை கதைகளை சொல்லவும், பாடல்களை பாடவும், நகைச்சுவையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
🎎 கலாச்சாரம், வரலாறு, மரபுகள் போன்றவற்றை கற்றுக்கொடுக்க உதவுகிறது.
🎎 கற்பனைத்திறனை வளர்க்க உதவுகிறது.