மார்ச் 21 - பன்னாட்டு வன நாள் (International Day of Forests
மார்ச் 21 - பன்னாட்டு வன நாள் International Day of Forests
உலக காடுகள் தினம்
🌳 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நோக்கம்:
🌳 காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
🌳 காடுகள் வழங்கும் பல்வேறு நன்மைகள் குறித்து மக்களை அறிவுறுத்துதல்.
🌳 வன அழிப்பின் தீமைகளை எடுத்துரைத்தல்.
🌳 காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துதல்.
முக்கியத்துவம்:
🌳 பருவநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
🌳 மண் அரிப்பை தடுக்கின்றன.
🌳 உயிரினங்களுக்கு வாழ்விடம் அளிக்கின்றன.
🌳 வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது.
🌳 எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.