தேசிய கல்வி நாள் (National Education Day) நவம்பர் 11
தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில்ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் தேசியக் கல்வி தினம் அனுசரிக்கப் படுகின்றது.
இத்தினம் 2008 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது.
சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர் ஆசாத் ஆவார்.
இவர் 1953 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பல்கலைக்கழக மானியக் குழுவை (University Grants Commission - UGC) நிறுவினார். இவர் இந்திய அறிவியல் நிறுவனம், கட்டமைப்பு & திட்டமிடல் பள்ளி ஆகியவற்றை நிறுவினார்.
இவர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவப் படுவதற்கு மூளையாகச் செயல்பட்டார்.
நாட்டில் கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக சங்கீத நாடக அகாடமி (1953), சாகித்ய அகாடமி (1954) மற்றும் லலித் கலா அகாடமி (1954) ஆகியவற்றை அவர் நிறுவினார்.
சுதந்திர இந்தியாவில் கல்வி முறையின் கட்டமைப்புகளை அமைப்பதிலும் கல்வி முறையின் தற்போதைய செயல்திறனை மதிப்பிடுவதிலும் ஆசாத்தின் பங்களிப்பை நினைவில் கொள்வதற்கான தினம் இதுவாகும்.