இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு Nobel Prize in Physics 2023
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு Nobel Prize in Physics :
உலக அளவில், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Nobel Prize in Physics : பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகள் பியர் அகோஸ்டினி (Pierre Agostini), பெரென்ஸ் கிரவுஸ் Ferenc Krausz மற்றும் Anne L'Huillier (அன்னே எல்'ஹுல்லியர்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இயற்பியலுக்கான பரிசை அறிவித்துள்ளது.