மிக முக்கிய ஆவணமாக உருவெடுத்த பிறப்பு சான்றிதழ்.. கிராமங்களில் டவுன்லோடு செய்வது எப்படி? How can I download my Tamil Nadu birth certificate online?
மிக முக்கிய ஆவணமாக உருவெடுத்த பிறப்பு சான்றிதழ்.. கிராமங்களில் டவுன்லோடு செய்வது எப்படி?
சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கலாம்.
அடையாள அட்டைக்காக கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களை மக்கள் எளிதாக டவுன் லோடு செய்ய முடியும். இதற்காக தமிழ்நாடு அரசு https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது.
இதில் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCHID என்ற பதிவெண்ணை கொடுப்பார்கள். மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்ததற்கான அடையாளமாக RCHID என்ற சீரியல் நம்பர் கொடுப்பார்கள். இந்த நம்பரை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை கொடுக்க வேண்டும்.
இது போக.. பாலினம், வயது , ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும் .
இதை பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டப்படும். இந்த பிறப்பு சான்றிதழை கிளிக் செய்து உடனே டவுன் லோடு செய்ய முடியும்.
அடையாள ஆவணம்; இந்த நிலையில்தான் நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
எதற்கெல்லாம் பயன்படும்: மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.