கோவிலில் தேங்காய்🥥 உடைப்பது ஏன்? Why breaking coconut 🥥 in temple?....
கோவிலில் தேங்காய்🥥 உடைப்பது ஏன்? Why breaking coconut 🥥 in temple?....
தேங்காய்..!!
🥥 கோவிலுக்கு சென்றாலே பெரும்பாலும் தேங்காய் உடைப்பது வழக்கம். தேங்காய் உடைக்கும் பாரம்பரியம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து நம் காலம் வரை தொன்றுதொட்டு வருகிறது.
🥥 கோவிலில் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்? அதன் பின் உள்ள காரணம் தான் என்ன? தெரிந்துகொள்வோம் வாங்க..!!
படைத்தல்:

🥥 எல்லா தெய்வங்களுக்கும் வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைத்து படைக்கிறோம். ஏனென்றால், இவ்விரண்டிற்கும் சிறப்பான தன்மை உண்டு.
🥥 பொதுவாக ஒரு பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் கொட்டையை எறிந்தால், மீண்டும் அதிலிருந்து செடி முளைக்கும். ஆனால் வாழைபழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினால் அதிலிருந்த்து மீண்டும் செடி முளைப்பதில்லை.
🥥 அதுபோலவே தென்னைமரமும், தேங்காயை சாப்பிட்டு விட்டு தேங்காயின் ஓட்டைப் போட்டால் அதிலிருந்து செடி முளைக்காது.
🥥 இவை இரண்டுமே அடுத்த பிறவியில்லா முக்தி நிலையைக் காட்டுவதாலே அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
🥥 அதிலும் தேங்காயிற்கு மற்றுமொரு சிறப்பு உண்டு.
தேங்காய்:

🥥 தேங்காயானது மும்மலங்கள் என்கிற ஆணவம், கன்மம், மாயையை குறிக்கின்றது.
🥥 இதில் மாயை என்பது, தேங்காயின் மேல் இருக்கும் மட்டை ஆகும். அதாவது பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. இந்த மட்டையை நீக்கி விட்டால், கன்மம் என்னும் நார் தெரிகிறது. கன்மம் என்பது ஆசை, பொறாமை போன்றவற்றைக் குறிக்கிறது. கன்மம் என்னும் நாரை நீக்கிய பின் ஆணவம் என்னும் ஓடு தெரிகிறது.
🥥 அந்த ஓட்டை உடைத்த பின்னே, வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியும். இந்த வெள்ளை பகுதியானது பரமாத்மாவை குறிக்கிறது.
🥥 முக்தி என்னும் நிலையை அடைய ஆணவம், கன்மம், மாயை போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டும். இதையே கோயிலில் தேங்காய் உடைக்கும் தத்துவமும் விளக்குகிறது.