வ.உ.சிதம்பரம்பிள்ளை V. O. Chidambaram Pillai
வ.உ.சிதம்பரம்பிள்ளை V. O. Chidambaram Pillai
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. அக்டோபர் 1906ஆம் ஆண்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரை தேவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
வ.உ.சி விடுதலை போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.