Search This Blog

டாக்டர் ராதாகிருஷ்ணன் Sarvepalli Radhakrishnan



டாக்டர் ராதாகிருஷ்ணன் Sarvepalli Radhakrishnan

🌟 நாட்டின் 2வது ஜனாதிபதியும், தத்துவமேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

🌟 1923ஆம் ஆண்டு இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.

🌟 இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம், காந்தி.

🌟 இவர் நாட்டின் முதல் குடியரசு துணைத்தலைவராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் 1975ஆம் ஆண்டு மறைந்தார்.




 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url