வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறது? Why do you get tears when you chop onions?
வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறது?🤔 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!!👉
வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வருவது ஏன்?
கண்ணீர் வருவது ஏன்?
வெங்காயத்தினை நறுக்கும்போது, நம்மில் பலருக்கு கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம், அதன் செல்களில் பொதிந்துள்ள புரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு எனும் வேதிப்பொருள் ஆகும்.
இது எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை வெட்டும்போது சில செல்கள் சிதைந்து இந்த வேதிப்பொருள் வெளிப்படும்.
இது எளிதில் ஆவியாகி உடனே கண்களை சென்றடைந்து, எரிச்சலை ஏற்படுத்தி கண்ணீரை தூண்டுகிறது.
அதோடு, வெங்காயத்தை நசிக்கினால் கூடுதல் செல்கள் உடைந்து, இந்த வேதிப்பொருள் அதிகமாக வெளிப்படும். இதனால் அதிக கண்ணீர் வரும்.
எரிச்சல் குறைய என்ன செய்ய வேண்டும்?
வெங்காயத்தை நீரில் நனைத்து வெட்டும் போது கண்ணில் எரிச்சல் குறைகின்றது.
ஏனெனில் வெங்காயம் நனைந்திருப்பதால் அந்த ஈரப்பதத்தை தாண்டி அந்த வாயு காற்றுக்குள் புகாது.