ஆதார் அட்டை புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.... டிசம்பர் 14ம் தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம்... Aadhaar card update: UIDAI extends last date for free update; details here
ஆதார் அட்டை புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.... டிசம்பர் 14ம் தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம்..
இந்தியாவில் வாழும் மக்களின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. இந்த ஆதார் அட்டை பெற்று பத்து வருடம் நிறைவு செய்தவர்கள், அதை இலவசமாக இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரை புதுப்பித்து கொள்ளலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பிக்கும் கடைசி தேதியை செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி, செல்போன், பிற ஆவணங்களில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை புதுப்பித்து கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. வரும் டிசம்பர் 14 வரை இலவசமாக myAadhaar போர்ட்டல் மூலம் ஆதாரில் தங்கள் ஆவணத்தை புதுப்பிக்க முடியும்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் உள்நுழைந்து பெயர்,பாலினம்,பிறந்த தேதி & முகவரி புதுப்பிப்பு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் எது தேவையோ தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். எந்த விவரத்தை புதுப்பிக்க வேண்டுமோ அதற்கான ஆவணத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு SRN எண் வழங்கப்படும். மேலும் நீங்கள் எந்த விவரத்தை புதுப்பிக்க விரும்புகிறீர்கள் என்பது குறித்த எஸ் எம் எஸ் வரும்.