C.N Annadurai கா. ந. அண்ணாதுரை
C.N Annadurai கா. ந. அண்ணாதுரை
✍ தமிழ்நாடு அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய சி.என்.அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
✍ இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பிறகு தி.க.வில் இருந்து விலகி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
✍ இவர் மாநிலங்களவை உறுப்பினராக 1962ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இவரது திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து தமிழ்நாடு முதல்வரானார். இவரே மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார்.
✍ அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969ஆம் ஆண்டு மறைந்தார். இவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.