கூகுளுக்கு இன்று 25-வது பிறந்தநாள் !Google's 25th birthday today!
பிரபல தேடுதளமான கூகுள், தனது 25-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது
கூகுள் இன்று 25வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பிரத்யேக டூடூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் Larry Page and Sergey Brin என்ற இரண்டு நண்பர்கள் உருவாக்கியது தான் கூகுள். தங்களுடைய ப்ராஜெக்ட்டாக ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள். நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறிதான், இன்று இணையதள உலகில் பிரபலமான சர்ச் இன்ஜினாக வளர்த்து நிற்கிறது.
செப்டம்பர் 27, 1998 அன்று முதன்முதலாக கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், 24 பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று தனது பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது.