Search This Blog

குழந்தையிலேயே ஏன் காது குத்த வேண்டும்?.. சுவாரஸ்யமான தகவல்.. தெரிந்து கொள்வோம் வாங்க..!!Why ear piercing should be done in children?




குழந்தையிலேயே ஏன் காது குத்த வேண்டும்?.. சுவாரஸ்யமான தகவல்..
 தெரிந்து கொள்வோம் வாங்க..!!
Why ear piercing should be done in children?
 
காது குத்துதல்…!!

👂 நம்மிடம் யாராவது வந்து ஏமாற்ற முயற்சிக்கும்போது எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு என்று அனைவருமே கூறியிருப்போம். 

👂 நாம் ஏன் காது குத்த வேண்டும்? என்று என்றாவது யோசித்திருக்கின்றீர்களா?.. இந்த உலகில் உள்ள அனைவருமே காது குத்திக் கொள்கிறார்கள்.. அது ஏன்?.. சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..!!!

காது குத்துதல்:

👂 பொதுவாகவே குழந்தை பிறந்த சில தினங்களிலேயே குழந்தைக்கு பெயர் வைத்துவிடுவார்கள்.

👂 அதன்பின் 3, 5, 7, 9, 11 என ஒற்றைப் படை மாதங்களில் அவரவர் வழக்கத்திற்கேற்ப ஆண், பெண் இருவருக்கும் காது குத்துவார்கள்.

👂 இந்த காது குத்து விழாவை உற்றார், உறவினர் என சொந்தபந்தங்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக செய்வார்கள்.

👂 இவ்வாறு காது குத்துவதால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

நன்மைகள்:

👂 காது மடல்களில் துளையிட்டு, கம்மல் போடுவதால், மெர்டியன் புள்ளி தூண்டப்பட்டு, மூளையின் இரண்டு பக்கமும் ஆக்டிவ் ஆகிறது. இது நினைவாற்றலையும், மூளை செயல்திறனையும் சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. 

👂 அதோடு, செவித்திறன் நரம்புகளும் தூண்டப்படுவதால், காது கேட்கும் திறனும் மேம்படுகிறது.

👂 காது மடலின் இணைப்புப் பகுதியில் கண் பார்வையின் இணைப்பு புள்ளி இருப்பதால், இது பார்வை திறனை மேம்படுத்துகிறது.

👂 இரத்த ஓட்டம் சீராக பாய உதவுகிறது.

👂 செரிமான செயல்பாடுகள், சுவாச ஆரோக்கியம், மனநலம் போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது.

👂 காது குத்திக் கொள்வதால், பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலியும், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலியும் குறைகிறது. இதன் காரணமாகவே பெண் குழந்தைகள் கட்டாயம் இரண்டு காதுகளிலும் கம்மல் அணிய வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url