பித்தளை பாத்திரத்தை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா? so many benefits of using brass cookware?
பித்தளை பாத்திரத்தை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா?
பித்தளை பாத்திரத்தை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா?
பித்தளை பாத்திரங்களின் மகத்துவம்..!!
நம் முன்னோர்கள் பித்தளை பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதில் அப்படி என்ன உள்ளது? என்ற கேள்விகள் எழுந்தாலும், இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பித்தளை பாத்திரத்தின் பயன்பாடுகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது என்றே சொல்லலாம்.
எனவே, பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவதால் அப்படி என்ன நன்மைகள் உள்ளன? என்று தெரிந்து கொள்வோம்.
பித்தளை என்பது செம்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு உலோக கலவையாகும்.
பித்தளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டவை.
மேலும் பித்தளை பாத்திரங்களின் உட்புறத்தில் தாமிரத்தின் சுவடு படிந்திருக்கும்.
தாமிரம் உடலுக்கு இன்றியமையாத கனிமமாகும்.
அவை உணவில் கலந்து நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன.
ஆனால், இன்றைய நவீன காலங்களில் எஃகு, கண்ணாடி, எவர் சில்வர், நான் ஸ்டிக் போன்ற பாத்திரங்கள் நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப புழக்கத்தில் உள்ளன.
ஓட்டல்களில் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறுவதற்கு பித்தளை பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சமையல் செய்வதற்கும், உணவு பரிமாறுவதற்கும் எவர் சில்வர் பாத்திரங்களுக்கு பதிலாக பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளை தருகின்றன.
பித்தளை பாத்திரம் வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது.
சமைக்கும் போது வெப்பத்தை சமமாக பரப்பி சீராக சமைப்பதற்கு உதவுகின்றன.
பிரியாணி, புலாவ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைப்பதற்கு பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
ஆனால் தக்காளி, சிட்ரஸ் போன்ற அமில, கார உணவுகளை சமைப்பதற்கு பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது.
எதிர்வினை புரிந்து உணவின் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
பித்தளை உறுதியான தன்மை கொண்ட உலோகம். நீடித்து உழைக்கக்கூடியது.
கீறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கின்றன.
அதுமட்டுமின்றி அந்த தண்ணீரில் பித்தளை பாத்திரத்தில் உள்ள தாமிரம் கலப்பதால், அதை நாம் பருகும்போது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
மேலும் உடல் சூட்டையும் முற்றிலுமாக குறைக்க உதவுகிறது.
மேலும் இவை இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.