Search This Blog

மின்மாற்றியை (Transformer) கண்டு பிடித்தவர் யார்? கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் பகுதி - 1 Inventions and Achievements Part - 1

1. அணுக்களில் புரோட்டானைக் கண்டறிந்து சொன்னவர் யார்?

எர்னெஸ்ட் ருதர்போர்ட்

விளக்கம்::
எர்னெஸ்ட் ருதர்போர்ட் அணுக்களில் உள்ள ப்ரோடானை 1919 ஆம் ஆண்டு கண்டு அறிந்து சொன்னார்..

2. கரியமில வாயுவை தாவரங்கள் உட்கவருவதைக் கண்டறிந்தவர் யார்?

ஜான் இங்கன்ஹாஸ்

விளக்கம்::
கரியமில வாயுவை தாவரங்கள் உட்கவருவதை முதன் முதலில் கண்டறிந்தவர் ஜான் இங்கன்ஹாஸ் என்பவர் ஆவார்..

3. மின்மாற்றியை (Transformer) கண்டு பிடித்தவர் யார்?

மைக்கேல் பாரடே

விளக்கம்::
மைக்கேல் பாரடே 1831 ஆம் ஆண்டு தான் மின்மாற்றியை முதன் முதலில் கண்டு பிடித்தார். மைக்கல் பரடேயை "மின்னியலின் தந்தை" என்றுரைத்தால் மிகையாகாது. இவர் நடத்திய ஆராய்ச்சிகள் ஏராளம், கண்டுபிடித்தவையும் ஏராளம். ஒரு மின்சுருளைச் சுற்றியுள்ள பகுதியில் காந்த அலைகள் வேறுபட்டால் அவ் மின்சுருளில் மின்சாரம் உண்டாகும் எனக் கண்டுபிடித்தார்.

 இதுவே மின் உற்பத்தி இயந்திரம் இயங்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும்..

4. அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?

எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்::
எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். இள வயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார்.

5. தொலைக்காட்சியை கண்டு பிடித்தவர் யார்?

ஜே. எல். பைர்ட்

விளக்கம்::
ஜே. எல். பைர்ட் 1926 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் தொலைக் காட்சியை கண்டு பிடித்தார். வட அமெரிக்காவில் சராசரியாக ஏழுவருடங்களுக்கு ஒருமுறை ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டியொன்றை வாங்குகின்றார்.

.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url