Search This Blog

முதல் கூட்டல் கணினியை உருவாக்கிய பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) பிறந்த நாள் இன்று



முதல் கூட்டல் கணினியை உருவாக்கிய பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) பிறந்த நாள் இன்று
★ உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) 1623ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் பிறந்தார்.

★ இவர் கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம் உடையவர். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். தனது 16வது வயதில் முதல் ஆராய்ச்சி நூலில் கூம்பு வெட்டுகளைப் (Essay on Conics) பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம், பாஸ்கல் தேற்றம் என்று தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

★ 1642ஆம் ஆண்டு தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதற்கு உதவியாக, கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி தந்தார். மேலும், இவர் முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார்.

★ நிகழ்தகவு கோட்பாடு, பாஸ்கல் விதி, பாய்ம இயக்கவியல் விதி ஆகியவற்றை கண்டறிந்தார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அழுத்தத்தின் SI அலகிற்கு பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

★ தனது தன்னம்பிக்கையால் விடாமுயற்சியுடன் சாதனை படைத்த பிலைசு பாஸ்கல் 1662ஆம் ஆண்டு மறைந்தார்.




 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url