யுகாதி பண்டிகை வரலாறு: ugadi history
யுகாதி பண்டிகை வரலாறு: ugadi history
உகாதி (Ugadi) அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் பண்டிகை ஆகும்.
மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர்.
இந்து சூரியசந்திர நாட்காட்டியின்படி, உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.
சைத்ரா மாதத்தின் முதல் நாளான பங்குனிமாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலே படைத்தல் தெய்வமான பிரம்மா தனது படைத்தல் தொழிலை ஆரம்பித்ததாக இந்து புராணங்களில் கூறப்படுகின்றது.
தமிழின் படி பங்குனி / சித்திரை மாத வளர்பிறை பிரதமை அன்று ரேவதி - அஷ்வினி நட்சத்திரத்துடன் கூடும் நாள்.
உகாதி என்கிற சொல் சமசுகிருதம் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது.
சமசுகிருதத்தில் "யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும், "அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் காணப்படுகிறது. "ஓர் ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில் "உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.
உகாதி சித்திரை மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறது.