விலங்குகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் Interesting facts about animals
* ஆந்தை தன் கழுத்தை முன்னும் பின்னும் மற்றும் பக்கவாட்டிலும் வளைக்கும் தன்மை கொண்டது. கோட்டானோ தன் கழுத்தை 360 டிகிரி வரை வளைத்துப் பார்க்கும்.
* மரங்களில் இருக்கும் வளையங்களை வைத்து அவற்றின் வயதை கணிப்பது போல மீன்களுக்கு அவற்றின் செதில்களை வைத்து கணிப்பார்கள்
* பாலூட்டிகளில் மிகப் பெரிய கண்கள் நீலத் திமிங்கலத்துக்குத்தான் உண்டு.
* மீன் இனங்களில் அதிக ஆண்டுகள் வாழ்வது ஸ்டர்ஜியன்
* இந்தியாவில் காணப்படும் ஒரே வகை மனித குரங்கு கிப்பன்.
* முதலையின் தொண்டையில் உள்ள பை போன்ற பகுதியில் நீரை மட்டும் தனியாக தடுக்க முடியும். இதானால் அது நிலத்தில் சாப்பிடுவதை போலவே நீருக்கடியிலும் சாப்பிட முடியும்.
* பெரிய கங்காருகளால் ஒரே சமயத்தில் 30 அடி வரை தாவ முடியும்.
* கெண்டை மீனின் ஆயுள் 50 ஆண்டுகள்.
* மலைப்பாம்புக்கு விஷம் இல்லை.
* திமிங்கலத்தின் மூளையின் எடை 250 பவுண்டு.
* முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். முதலையின் வயதை அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறார்கள்.
* முதலைகளில் குரோகடைல், அல்லிகேட்டர் என இருவகைகள் உள்ளன.
* தன் வாலைப் பற்றிக் கொண்டு நிற்கும் தன்மையை கடல் குதிரைகள் பெற்றுள்ளன. பெண் கடல் குதிரைகள் முட்டையிட்டாலும் ஆண் கடல் குதிரைகளே அடைகாக்கின்றன. இதற்கு அதன் வயிற்றில் இருக்கும் தனி பை உதவி செய்கிறது.
* கிழட்டுச் சிங்கத்தை குட்டிகள் ஒதுக்கி விடும்.
* இந்தியாவில் 242 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் எழுபது வகைகள் தான் கொடிய விஷம் கொண்டவை.
* கொம்பிருந்தும் எதிர்களை தன் பல்லினாலேயே தாக்கும் மிருகம் காண்டாமிருகம்.
* பாலூட்டிகளில் அதிகப் பற்கள் உள்ள முதல் உயிரினம் திமிங்கலம். இதற்கு மனிதனை விட எட்டு மடங்கு அதிகமாக பற்கள் இருக்கின்றன.
* உலகிலேயே அதிபயங்கரமான விஷத்தன்மை கொண்டது ரஸ்ஸல் ஷபர் என்ற பாம்பு வகைகள்.
* மிகப் பெரிய ஆக்டோபஸ் 15 கிலோ எடை இருக்கும். ஆனால் இத்தனை பெரிய ஆக்டோபஸ் தன் மூன்று இதயங்களுடன் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு உள்ள ஓட்டையில் புகுந்து வெளியே வரமுடியும்.
* தன் உருவத்தோடு ஒப்பிடும்பொது மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கமாகும்.
* பல துயரில் கவிதை எழுதினார் கீட்ஸ். கண் இழந்தும் காவியம் படைத்தார் மில்டன். அதுபோல சைக்கலாஜியின் தந்தை ‘சிக்மண்ட் பிராய்டு’ புற்றுநோய் காரணமாக 1993 – 1939 – இல் முப்பது முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நோய் – துன்பம் இவர் ஆய்வை தடுக்கவே இல்லை. பல உளவியல் ஆய்வுகளை வெளியிட்டார்.
* ஒட்டகம் 10 நிமிடத்தில் 30 காலன் தண்ணீர் குடித்து விடும்.
* வேகமாக ஓடும் ஆற்றல் மிக்கது குதிரை. இதில் மொத்தம் 150 வகைகள் உண்டு. அரேபிய குதிரைகள் தனிரகம், பலர் விரும்பி வாங்குபவை. மிகச்சிறிய குதிரை 75 செ.மீ. உயரமே உள்ளது. மிகப்பெரிய குதிரை 910 கிலோ உள்ள ஷயர்.
* முதலையின் கண்ணில் இருந்து சில சமயம் நீர் வடியும். இதனை அழுகை – கண்ணீர் என நினைக்கிறோம். அது சரியல்ல. முதலை உணவை அப்படியே விழுங்கும். அதனை செரிக்க வைக்க வயிற்றில் ஒரு திரவம் சுரக்கும். அப்படி சுரக்கும் நீர் சற்று அதிகமாகிவிட்டால், அந்த அதிகப்படி நீர்தான் கண்வழியே வெளியேறும்.
* பூனைகளுக்கு இனிப்பான உணவுப் பொருட்களைக் கண்டால் அலர்ஜி.
* திமிங்கலத்தின் உடலில் குட்டியாக முடி வளர்வது உண்டு.
* டால்பின்கள் 'மீனவர்களின் தோழர்கள்' என அழைக்கப்படுகிறது. இவற்றில் 30 வகை இனங்கள் உண்டு. கடல் வாழ் உயிரினங்களிலேயே மதி நுட்பம் மிக்கவை இவைதான். டால்பின்கள் உண்டாக்கும் மீயொலியின் எதிரொளிப்பாலே அது தன் இரையை அறிந்து கொள்கிறது. இவை மீன்களையே உண்ணும்.
* குதிரை நடக்கும்போது கழுத்தை மேலும் கீழும் ஆட்டுகிறது.
* உடல் அளவு விகிதத்தின்படி மற்ற எல்லா உயிரனங்களை விட சிங்கத்தின் குரல்வளை மிகப்பெரியது. இதுவே சிங்கத்தின் கர்ஜனைக்கு முக்கிய காரணமாகும்.
* சாம்பல் நிறமுள்ள காண்டா மிருகத்தை வெள்ளை காண்டா மிருகம் என்று அழைக்கப்பார்கள்.
* 'பாம்பே டக்' என்பது ஒரு வகை மீனின் பெயராகும்.
* அமெரிக்காவிலுள்ள அணில்களுக்கு முதுகில் கோடுகள் கிடையாது.
* நீலத்திமிங்கலத்தின் குட்டி தினமும் 100 லிட்டர் பாலைத் தனது தாயிடமிருந்து குடிக்கிறது.
* திமிங்கலத்தின் இதயம் நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
* வௌவால் பறக்கக் கூடியது. ஆனாலும் பறவையல்ல. இது விலங்கினம். பாலூட்டி வகை. குட்டிபோட்டு – பால் தரும். பாலூட்டி இனத்தில் பறக்கும் ஒரே இனம் வௌவால். பகலில் உறங்கி இரவில் இரை தேடும் இது. எதிரொளி மூலம் எதிரே இருக்கும் தடையை அறியும். வேகமாய் பறந்தாலும் உடனே திரும்பிவிடும். மோதிக் கொள்ளாது. இதில் பழம் தின்னி வௌவால் என்று ஒரு வகை உண்டு. இது பெரியது.
* அதிக நாட்களுக்கு நீர் குடித்து சேமிக்கும் விலங்கு ஒட்டகம். அதோடு மிகமிக வேகமாக நீர் குடிக்கும் விலங்கு இதுவே. முன்று நிமிடத்தில் 400 லிட்டர் வரை தண்ணீரைக் குடிக்கும் சக்தி வாய்ந்தது ஒட்டகம்.
* மூக்கால் நுகர்கிறோம். இது பல உயிரினகளுக்கு பொதுவானதே. ஆனால் நாய்க்கு இது மிக அதிகம். அதனால்தான் போலீஸ் நாய் குற்றவாளியை பிடிக்க பயன்படுத்தப்படுகிறது. அது காலடித்தடம் – அதன் வியர்வை வாசனையை வைத்து, அவன் கடந்த – பாதையை மோப்பசக்தியால் அறிகிறது. பயம் – பதட்டம் காரணமாக குற்றவாளிக்கு சற்று அதிகம் வியர்வை சுரக்கும். அதுவே மோப்ப சக்திக்கு துணை புரிகிறது.
* நீர் யானை விசித்திர விலங்கு. இதன் தோல் மிகவும் மென்மையானது. நீண்ட நேரம் நீரில் இருந்தும் நீரால் பரவும் எந்த நோயும் இதனைப் பாதிக்காது. காரணம் – இதன் வியர்வையே. அந்த வியர்வையே பாதுகாவலன். சூரியனின் வெப்பம் அதனைத் தாக்காமலும், நோயக்கிருமிகள் தாக்காதும் பாதுகாப்பாக, ஒரு மருந்துபோல – எதிர்ப்பு சக்தியாக இது செயல்படுகிறது.
* மணிக்கு 60 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் ஓடக்கூடிய விலங்கு ஓநாய். இது நாய் – நரி கலப்பு இனம். நரி போல ஊளை எழுப்பக் கூடியது. இது எலும்புகளையும் தின்னக்கூடிய வழிய பற்கள் கொண்டது.
* சுறாமீன் நீந்திக் கொண்டே இருக்காவிட்டால் செத்துவிடும்.
* அமேசான் காட்டில் வசிக்கும் 'பூமா' என்ற வகை சிங்கங்கள் இரவில் மட்டும்தான் வேட்டையாடும்.
* பெரிய திமிங்கலமான நீலத் திமிங்கலம், 29 மீட்டர் நீளமும் 9 மாடிக் கட்டட அளவுக்கு உயரம் வளரும்.
* முதலை தண்ணீருக்குள் இருக்கும்போது கண், மூக்கு, வாய் ஆகிய மூன்றையும் தண்ணீரின் மேலே வைத்துக்கொள்ளும்.
* பெண் யானைக்கு மதம் பிடிக்காது.
* இந்திய மக்கள் பெரிதும் பயன்படுத்தும் விலங்கு ஆடு.
* 'பீகா' என்ற ஆப்பிரிக்கப் பாம்பு பழங்களை உண்டு வாழ்கிறது.
* முதலை நீரில் வாழும் வலுவான விலங்கு. தரைக்கு வந்தால் இதற்க்கு பலமில்லை. வலுவான பற்கள் கொண்டது. மூக்கில் பல் உள்ள விலங்கு இது. அதிக நேரம் மூச்சை அடக்கும் பிராணியும் இதுவே.
* தவளைகள் சில பழுப்பு நிறம். சிலவகை பச்சை வண்ணம் கொண்டவை. அபூர்வ வகையாக நீல நிறத்திலும் தவளை உண்டு. இவ்வகை சீனா, மியான்மர் (பர்மா) நாடுகளில் காணப்படுகிறது. இது ஒரு மரத்தில் இருந்து அடுத்த மரத்திற்கு பறப்பது போல் தாவிச் செல்லும் திறன்மிக்கது. 10 முதல் 20 அடி தூரம் பறக்கும்.
* 20 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த உயிரினம் டினோசர். பல்லி வடிவம். அதனைப் பல மடங்கு பெருக்கிப் பார்த்தால் இதன் உருவம் புலனாகும். மிக நீளமான டினோசர் டிப்லோடோகஸ் என்றும், தாவரங்களை மட்டும் உண்டு வாழ்த்த டினோசர் பிராஸ்டோகஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சிலவகை டினோசர் இறைச்சியை உண்டு வாழ்ந்தன. அதன் பெயர் டைரான்னோசரஸ் ரெக்ஸ்.
இதில் பல வகைகள் இருந்தன. காலப்போக்கில் அழிந்துவிட்டன. பனி அடுக்குகளில் அதன் உடல் சிதைவுகள் கிடைத்தன. தலையில் மூன்று கொம்புகள் உள்ள, தாவர உணவு உண்ணும் மிகப் பெரிய டினோசர் டிரிசிரோடேய்ஸ்.
* உலகிலேயே மிகமிகச் சிறிய நாய்க்குட்டி என்று பெருமை ‘டான்சா’ என்ற பெயர் கொண்ட பெண் நாய். ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்தது. இதன் நீளம் வெறும் 7 இஞ்ச மட்டுமே. மொத்த எடை 27 அவுன்ஸ் தான். இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.
* நண்டு தன் ஆயுட்காலத்தில் 18 முறை தன் தோலை உரித்துக் கொள்ளும்.
* பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவை. சூழ்நிலை – இடத்திற்கு ஏற்ப தன்னை தனது விரோதிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கையில் கொண்ட பாதுகாப்பு வசதி இது. பெரும்பாலும் இவை பச்சை நிறம் கொண்டவை. மரங்களின் இலை நிறம் பாதுகாப்பு. அதிக பட்சம் ஒரு அடி நீளம் – ஓணான் வடிவம் இதன் அமைப்பு. மடகாஸ்கர் தீவில் இரண்டு அடி நீளமுள்ள ராட்சத பச்சோந்திகள் வாழ்கின்றன. இதன் நாக்கு 10 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும். ரப்பர் போல் நீளும் தன்மை, ஸ்ப்ரிங் போல சுருங்கும் தன்மை கொண்ட நாக்கு இது. நுனி நாக்கு அகலமாக இருக்கும். விந்தை – விநோத உயிரினத்தில் இதுவும் ஒன்று.
* அசை போடும் பிராணிகளுக்கு உள்ள பொதுவான ஒற்றுமை, அவை நான்கு இரைப்பை கொண்ட விலங்குகள் ஆகும்.
* முதலையால் ஓர் இரும்பு ஆணியைக் கூட ஜீரணித்துவிட முடியும்.
* ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.
* ஹிப்போபொட்டமஸின் வியர்வை சிவப்பு நிறத்தில் இருக்கும்.
* 'டவ்ரகாலி' எனப்படும் ஆந்தை முகக் குரங்குகள், ஆந்தையைப் போல இரவில் மட்டுமே தென்படும்.
* 'ஆங்வான்டிபோ' வகைக் குரங்குகள் வெளவாலைப் போல மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடியே உறங்குமாம்.
* 'உகாரி' என்ற குரங்கின் உடலிலிருந்து ஆரஞ்சு பழச்சாற்றின் மனம் எப்போதும் வீசுமாம்.
* 'இன்டிரிஸ்' வகைக் குரங்கு மனிதனைப் போலவே கத்துவதோடு அல்லாமல் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கமுடையது.
* 'லெமூர்' வகைக் குரங்குகள் மிகவும் ஒல்லியானவை.
* 'வாணன்டாரூ' என்ற குரங்கினம் மிகவும் புத்திக் கூர்மையுடையது.
* விசித்திரமான கடல் பிராணியான 'ஆக்டோபஸுக்கு' எட்டுக் கொடுக்குகள் உள்ளன.
* முதலைக்கு மட்டும் எத்தனை முறை பல் விழுந்தாலும் மறுபடியும் முளைத்து விடும்.
* யானையின் சராசரி எடை 8 டன்.
* வயதான பூனை இளம் பூனையைவிட அதிகம் பால் குடிக்கும்.
* தவளையின் நாக்கு வாயின் முன்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இதன் பின்நுனி இரட்டைப் பிளவாக இருக்கும்.
* ஐரோப்பா,வட மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பப் பகுதிகள் போன்ற இடங்களில் மரத் தவளைகள் காணப்படுகின்றன.
* ஒருவகை ரசாயன செயல்பாட்டின் மூலம் திமிலிலுள்ள கொழுப்புச்சத்து தண்ணீராக மாற்றப்படுவதால் ஒட்டகம் பாலைவனங்களில் 17 நாட்கள் வரை தண்ணீரின்றி வாழ முடிகிறது.
* உலகிலேயே மிகப்பெரிய விலங்கு நீலத் திமிங்கலம் ஆகும்.
* முதலைகளில் பெண் முதலை ஒரு தடவைக்கு 7௦ முட்டைகள் வரை இடும் இயல்புடையது.
* ஒட்டகத்தின் பிறந்த குட்டி மூன்றரை அடி உயரம் இருக்கும்.
* கோலா கரடிகள் இடது கைப் பழக்கம் கொண்டவை.
* கரடிகளிலேயே அதிக எடையுள்ள கரடிகள் வட அமெரிக்கக் காடுகளில் வசிக்கும் ‘கிரிஸ்லீ’ என்பவையாகும்.
* விலாங்குமீன் நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி கொண்டதாகும்.
* வரிக்குதிரை கத்தும்போது நாய் குறைப்பது போலவே இருக்கும்.
* மூளையை உடம்பிலிருந்து எடுத்துவிட்டாலும் உயிர் வாழும் ஒரே உயிரினம் ஆமை.
* பாம்பு முட்டையிட்ட பிறகு அந்த முட்டைகள் பெரிதாக வளரும் தன்மையுடையவை.
* உலகில் 1,6௦௦ வகை எலிகள் உள்ளன.
எலிக்கு பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
எலி ஒரு நாளில் 13 மணி நேரம் தூங்குகிறது.
அமெரிக்காவிலுள்ள ஒருவகை எலிகள் தண்ணிர் குடிப்பதில்லை.
எலிகள் ஒட்டகத்தையும்விட அதிக நாட்கள் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழும்.
* ஆமைக்கு பற்கள் கிடையாது. தாடைகளின் ஓரத்திலுள்ள கூர்மையான கொம்பு அலகினால் இரையை உண்ணுகிறது.
* அணில்களில் 365 வகைகள் உள்ளன. அணில் ரோடென்டியா என்ற பெருச்சாளி வம்சத்தை சார்ந்தது. இது தோன்றி சுமார் ஐந்து கோடி ஆண்டுகள் ஆகின்றன. ஒரு தடவைக்கு அணில் 4 குட்டிகள் வரை போடும். அணில் தனது பற்களை மரத்தில் தீட்டிக் கொள்ளும். கொட்டைகளை உடைக்கும் வலிமையான பற்கள். இதன் உடல் மெல்லியவை. அதே சமயம் மேலே இருந்து கீழே விழுந்தாலும் காயம்படாது. மரத்திலும் – தரையிலும் வாழும் இனம். அணில்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 6 ஆண்டுகள்.
* நான்கு முதல் ஐந்தடி உயரம் வளரக்கூடியது பாண்டா கரடி. ஆனால் பிறக்கும்போது ஒரு சுண்டெலியை விட சிறியதாகவும் சுமார் நான்கு அவுன்சு எடை கொண்டாதகவும் இருக்கும்.
* நம் உணவு உற்பத்தியில் 25 சதவீதத்தை எலிகள் அழிந்து விடுகின்றன.
* முதலைகள் தோன்றி 20 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
முதலைகளில் 23 இனங்கள் உள்ளன.
முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ் தாடையில் 30 பற்களும் உள்ளன.
நீரில் இருந்தாலும் சில சமயங்களில் முதலைக்கு ஜலதோஷம் பிடிக்குமாம்.
* யானை நம் அருகில் வரும் வரை அதன் காலடி ஓசை நமக்கு கேட்பதில்லை. ஏனென்றால் யானையின் பாதத்தில் சதையும் கொழுப்பும் நிறைந்து கனமான மெத்தை போல் இருக்கின்றது.
* நீர் யானை கொட்டாவி விட்டால் அது கோபத்துடன் இருக்கிறது என்று அர்த்தம்.
* கழுதைப்புலியின் ஊளைச் சத்தம் ஒரு பைத்தியக்காரனின் சிரிப்பு சப்தம் போல இருக்கும். இவ்வகை உயிரினம் சகாரா, ஆப்ரிக்காவில் உள்ளது. மற்ற உயிரினம் உண்டு போட்ட மிச்சம் மீதிகளை இது உண்ணும். இதற்கு காட்டு ‘துப்புரவாளன்’ என்றும் பெயர் சொல்வார்கள். இது கருந்திட்டு கழுதைப்புலியாகும்.
* ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.
* முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ் தாடையில் ஒரு பல்லும் உண்டு.
* மத்திய அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் விஷமிக்க தவளைகள் உள்ளது. இதைக்கடித்த நாய் – பாம்பு இறந்துவிடுகின்றன.
தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, கிழக்கு இந்தியத் தவளைகள் சில மரத்தில் வாழுகின்றன. மரத்தில் ஏறிட வசதியாக அதன் கால்கள் அமைந்துள்ளன. கால் விரல்கள் கூர்மையானவை. அதோடு பசை உள்ளதாகவும் இருக்கும்.
* ஒவ்வொரு நாளும் ஒரு திமிங்கலம், 4 டன் உணவு உண்ணும்.
* கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
* டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும் காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.
* தோல் வாத்தியம் விலங்குகளின் தோலால் செய்யப்படுகிறது. திபெத்தில் புத்த சன்யாசிகள் பயன்படுத்தும் ஒருவித தோல் கருவி மனிதக் தோலில் தயார் செய்யப்பட்டது.
* ஆட்டு இறைச்சியில் 13.3 சதவீதம் கொழுப்பு உள்ளது.
* முதலைகள் ஆணா, பெண்ணா என்பதை அவை முட்டைகளாக இருக்கும்போது இருந்த கூட்டின் தட்ப வெப்ப சூழல்தான் முடிவு செய்யும். 90 - 93 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அடை காக்கப்பட்டு பிறப்பவை ஆண் முதலையாகவும் 82- 86 டிகிரி வெப்பத்தில் பிறப்பவை பெண் முதலைகளாகவும் பிறக்கும்.
* குளிர்காலங்களில் பாம்புகள் அதிகமாக வெளியில் செல்வதில்லை.
* அமெரிக்காவில் காணப்படும் வயிற்றுப் பை உள்ள ஒரே விலங்கு ஓபோசும்.
* அனைத்து உயிரினங்களும் தலை இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும். ஆனால், 'கடம்பா' என்றொரு மீன் வகை வால் இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும்.
* ராஜநாகம் தனியே கூடுகட்டி முட்டையிடும். முட்டையைக் கோழி போல அடை காக்கும்.
* சிறிய திமிங்கல வகை, 2.6 மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது.
* மனித நேயத்திற்கு துணைபுரிய அமைக்கப்பட்ட சேவை அமைப்பு செஞ்சிலுவைச் சங்கம் (ரெட் கிராஸ்) நீலச் சிலுவை (ப்ளூ கிராஸ்) சங்கம் எது தெரியுமா? விலங்குகள் நலம் காக்க இயங்கும் அமைப்பே அது.
* விலங்குகளில் எந்தவித சப்தமும் செய்யாத, செய்ய முடியாத ஒரே விலங்கு ஒட்டகச்சிவிங்கி. மிகவும் உயரமானது இது. 19 அடி கூட வளரும்.
* முதன்முதலில் காட்டு எருமை, பசு முதலிய கால்நடைகளை வீட்டு கால்நடைகளாய் மாற்றியவர்கள் இந்தியர்களே.
* விலங்குகளில் அதிக பற்கள் உடையது நாய்தான். இதற்கு மொத்தம் 42 பற்கள் உள்ளன.
* குட்டிப் போட்டு பாலூட்டும் பறக்கக்கூடிய ஒரே பிராணி வெளவால்.
* மிருகங்களில் குதிரையைப் பற்றிய புத்தகங்களே உலகில் அதிகம் வெளிவந்துள்ளன.
* யானை தினமும் இரண்டு மணி நேரமும், புலிகள் சராசரியாக 18 மணி நேரமும் தூங்கும்.
* கண்களை திறந்தபடியே உறங்கும் விலங்கு முதலை.
* இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1972ம் ஆண்டு துவக்கப்பட்டது.
* யானை தன் துதிக்கையால் ஆயிரம் கிலோ எடை வரையிலான பொருள்களைத் தூக்கும் திறன் கொண்டது.
* ஆமைகள் நிலத்தில் மெதுவாகச் செல்லும். ஆனால் நீரிலோ அதன் வேகம் மணிக்கு 35 கி.மீ. ஆகும்.
* பன்றி சீனாவின் புனித விலங்காகக் கருதப்படுகிறது.
* முள்ளம்பன்றியின் உடல் முழுதும் பெரிய முள் இருக்கும். ஆபத்து காலத்தில் அது சிலிர்த்துக் கொள்ளும். அதன் உடலில் ஏறத்தாழ 3000 முட்கள் இருக்கும்.
* உலகில் பாம்புகளே இல்லாத நாடு ஹவாய் தீவு.
* 'சேல்' என்ற வகை மீன் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.
* புலி மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.
* புலியின் உடலில் 100க்கும் மேற்பட்ட வரிகள் இருக்கும்.
* ஆண் புலியின் எடை 200 கிலோ முதல் 320 கிலோ வரை இருக்கும்.
* மூக்கில் பல் உள்ள விலங்கினம் முதலை.
* இந்தியாவில் 250-க்கும் மேற்ப்பட்ட பாம்பினங்கள் காணப்படுகின்றன .இவற்றில் 23 இனங்களைத் தவிர மற்றவை விஷமற்றவை.
* ‘சிராபின்’ என்ற மீனானது ஆபத்துக் காலத்தில் தன்னுடலை மணலில் மறைத்துக்கொண்டுவிடும்.இது தன் துடுப்பினை பயன்படுத்தி நடக்கவும் செய்யும் இயல்புடையது.
* ‘பக்பர் மீன்’ என்ற மீன் எதிரியிடமிருந்து தற்காத்து கொள்ள அதிக அளவு தண்ணீரைக் குடித்து குடம் போல் ஆகிவிடும். அதன் முட்கள் வேறு பயமுறுத்துவதால் எதிரிகள் ஓடியதும் இது தண்ணீரை வெளியேற்றி இயல்பாகி விடும்.
* மனிதர்களுக்கு மனிதர் கைரேகை வேறுபடுவது போல ஒவ்வொரு வரிக்குதிரையின் வரிகளும் வேறுபடும்.கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை வரிக்குதிரைகள்.
* பிறப்பு முதல் சாகும் வரை நீர் அருந்தாத உயிரினம் பல்லி.
* மனிதனைவிட 100 மடங்கு ஒலி கேட்கும் திறன், கைக்கடிகர ஓசையையைக்கூட 10 அடி தூரத்தில் இருந்தே நாயால் கேட்க முடியும். மோப்ப சக்தியும் நாய்க்கு அதிகம்.
* கோலியாத் இனத் தவளைகள் தான் உலகிலேயே பெரியவை. அண்டார்டிகா தவிர உலகின் அனைத்துக் கண்டங்களிலும் தவளைகள் உள்ளன. அம்பிபியன்ஸ் என்ற குழுவைச் சேர்ந்தவை தவளைகள்.
* எலும்பு இல்லாத விலங்கினம் 'ஜெல்லி மீன்'.
ஜெல்லி மீனின் உடலில் பல கண்கள் உள்ளன. இதனால் அவற்றால் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும்.
* பெண் புலியின் எடை 120 கிலோ முதல் 181 கிலோ வரை இருக்கும்.
* வெள்ளைப் புலிகளுக்குப் பிறக்கும் குட்டிகளில் ஒரு சில மட்டுமே வெள்ளை நிறத்தில் இருக்கும்.
* ஒட்டகங்கள் 240 கிலோ எடையுள்ள பொருளைச் சுமந்து கொண்டு தொடர்ந்து 50 கி.மீட்டர் தூரம் வரை நடக்கும் ஆற்றல் கொண்டவை. ஒட்டகங்கள் ஒரே சமயத்தில் 60 லிட்டர் வரை நீரை உட்கொள்ளும்.
* வெப்பத்தை அளக்கும்போதும், உணவின் சத்து அளவைக் குறிக்கும்போதும் கலோரி அளவில் குறிப்பிடப்படுகிறது. கலோரி என்பது ஒரு கிலோ கிராம் தண்ணீரை ஒரு டிகிரி செல்சியஸ்-ல் சூடாக்குவதற்கு தேவைப்படும் வெப்பத்தின் அளவைக் குறிக்கிறது.
* மனிதனை விட 100 மடங்கு கேட்கும் சக்தி உள்ள விலங்கு நாய்.
* டால்பின்கள் நீர்பரப்பில் இருந்து 20 அடி உயரம் வரை கூட துள்ளிக் குதிக்கும். சில டால்பின்கள் நீருக்குள் 1000 அடி வரை கூட 'டைவ்' அடிக்கும்.
* உலகிலேயே மிகப்பெரிய தவளை ஆப்ரிக்காவில் வாழும் 'கேலியாத்' என்ற தவளை ஆகும்.
* புனுகு என்னும் நறுமணப் பொருள் புனுகுப்பூனை என்ற விலங்கிலிருந்து எடுக்கப்படுகிறது.
* 'நாக்கு மீன்' எப்போதுமே உணவைத் தேடி இது போகாது. ஏனென்றால், பாறைகளுக்கு மத்தியில் அப்படியே படுத்துக் கொண்டு ஒரே இடத்தில இருந்து வாழ்வதுதான் இதற்கு பிடிக்குமாம்.
* கடல் பூனை மீன்களில் ஆண் இனம் தன் குட்டிகள் பொரிந்து வெளியே வரும் வரை அந்த முட்டைகளை வாயிலேயே வைத்திருக்கும்.
* நீரில் வாழும் பாலூட்டிகளில் மிகப் பெரியது நீலத்திமிங்கலம். அதன் எடை 160 டன் இருக்கும். 50 ஆண்டுகள் உயிர் வாழும். அதன் சிறுதுளை போன்ற காதுகளில் படியும் மெழுகு அடுக்குகளைக் கொண்டு அதன் வயதைக் கணக்கிடுகிறார்கள்.
* ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் வசிக்கும் நீர் யானைகள் தண்ணீருக்குள் அப்படியே குட்டி போடுகின்றன. குட்டிகள் வளர்வதும் தண்ணீரிலேயே தான். குட்டி நீர் யானைகள் சுவாசிப்பதற்காக அவ்வப்போது நீருக்குள் மேல் வரும்.
* நின்றபடி தூங்கும் விலங்கு குதிரையாகும்.
* உலகில் அதிக ரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கலம். இதன் உடலில் 8000 லிட்டர் ரத்தம் இருக்கும்.
* வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்கு பற்கள் வயிற்றில் உள்ளன.
* திமிங்கலம் குட்டி போடும்போது வால் பகுதி தான் முதலில் வெளியே வரும்.
* முதலை 300 ஆண்டுகள் கூட உயிர் வாழும் இயல்புடையது.
* மனிதனைப் போல குறட்டைவிட்டுத் துங்கும் விலங்கு யானை.
* நேப்பில்ஸ் நகரத்தில் ஒருமுறை தெரு நாய்களும் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களும் ஓயாது ஊளையிட்டுக் கொண்டிருந்தன. இக்கூச்சலைப் பொறுக்க முடியாத மக்கள், நாய்களைத் தடியால் அடித்து ஓலத்தை நிறுத்தினார். இது முடிந்த ஒரு சில மணி நேரத்தில் அங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சி 1783-ஆம் ஆண்டு நடந்துள்ளது.
* கனமான மூளை உள்ள விலங்கு திமிங்கலம்.
* உலகில் 4,500 வகையான பாலூட்டிகள் உண்டு.
* பார்க்க வயலின் மாதிரி இருப்பதால் இதனை 'வயலின் மீன்' என்று கூப்பிடுவார்கள். எதிரிகளிடம் சிக்கிக் கொண்டால், சுறுசுறு என்று கரண்ட் மாதிரி ஒரு கதிரை எதிரிகளோட உடம்பில் பாய்ச்சி விட்டு தப்பித்துவிடும்.
* முதலையின் முட்டையிலிருந்து வெளி உலகுக்கு வரும் முதலைக் குஞ்சுகள் முட்டையை விட மூன்று மடங்கு நீளம் கொண்டது. ஆனாலும் அளவில் சிறிய முட்டைக்குள் சுருண்டு இருக்கின்றன.
* மட் ஸ்கிப்பர்(Mud Skipper) என்ற மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியவை. இவ்வகை மீன்களால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிலத்தில் இருக்க முடியும். நிலத்தில் இருக்கும் போது இவை தன் வாயின் மூலம் சுவாசிக்கும். மட்ஸ்கிப்பர்களுக்கு கண்கள் தலைக்கு மேல்தான் இருக்கும். இதனால், தன்னை சுற்றியுள்ள எல்லாவற்றையும் இந்த மீன்களினால் காண முடியும்.
* இந்த மீனின் பெயர் திருக்கை. இதன் பேரிலே தான் கை இருக்கு. ஆனால் உடம்பிலே இல்லை. அதற்குப் பதிலாக ஒரு நீளமான இண்டிகேட்டர் இருக்கிறது. இதை வைத்து எல்லாவற்றையும் ஒரு முறை தடவி பார்த்து விட்டுத் தான் எங்கேயும் நகருமாம்.
* உலகிலேயே மிகப்பெரிய மீன்காட்சியகம் சிட்னி நகரில்[ஆஸ்திரேலியா] அமைந்துள்ளது.
* அணில் பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை விரும்பி உண்ணும். தனக்கு வேண்டியதை சாப்பிட்டது போக, மீதியை மண்ணுக்குள் குழி தோண்டி புதைத்து வைக்கும் பழக்கம் உடையது . திரும்ப அவற்றை எடுக்க மறந்து போய் விட்டுவிடுமாம்.
* பொதுவாக ,எலிகளை கண்டு பயப்படுகிறவர்களைக் காட்டிலும் தவளைகளைக் கண்டு பயப்படுகிறவர்கள் தான் அதிகம்.
* நாகப்பாம்பு தண்ணீரில் நீந்தும்போது தன் தலைப்பகுதி தண்ணிரில் படாமல் பார்த்துக்கொள்ளும்.
* யானையின் துதிக்கை 40 ஆயிரம் தசைகளால் ஆனது.
* சிங்கம் 12 மீட்டர் தூரம் வரை தாண்டும்.
* மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.
வேகமாக ஓடக்கூடிய விலங்கு சிறுத்தை.
* பிளாடிபஸ் விசித்திரமான உடலமைப்புடைய பிராணி. உடல் நீர் நாயைப் போன்றும் ,நகங்கள் நாய்களுக்கு இருப்பதை போலவும், அகன்ற தட்டையான அலகு வாத்தையும் போல ஒத்திருக்கும் இதற்கு சவ்வுள்ள கால்களும் இருக்கும்.
* நூறு வருஷங்களுக்கு மேல் வாழும் மிருகம் ஆமை.
* ‘ஏழைகளின் பசு’ என்று அழைக்கப்படுவது ஆடு.
* பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறக்கும் குட்டிதான் கோவேறு கழுதை.
* வௌவால்களில் சைவம், அசைவம் என இரண்டு வகையும் உண்டு.
* உலகிலேயே மிகப்பெரிய வனவிலங்கு பூங்காவின் பெயர் க்ரூக்கர் நேஷனல் பார்க்.
* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.
* யாக் வகை எருமைகள் மிகவும் உயரமான இடங்களில் தான் வசிக்கின்றன. இதன் பால் ஊதா நிறத்தில் இருக்கும்.
* நீலத் திமிங்கலத்தின் இதயம் ஒரு நிமிடத்துக்கு ஒன்பது முறை மட்டும் தான் துடிக்கும்.
* டால்பின் ஒரு கண்ணை திறந்தபடியே தூங்கும்.
* பசுவின் இரைப்பையில் நான்கு அறைகள் உள்ளன.
* வேறு எங்குமே காணப்படாத பல வகை அபூர்வ உயிரினம் உள்ளது ஆஸ்த்ரேலியாவில். கங்காரு, கூலா, வாம்பட்டு, பைப்பாலுட்டிகள், வாலபி இங்கு விசித்திரமானவை. 150 வகை பாலூட்டிகள் உள்ளன. 140 வகை பாம்புகள், 340 பல்லி வகைகள் இங்குள்ளன. புலிப்பாம்பு என்கிற கொடிய விஷப் பாம்பு உள்ளது. இதன் விசித்திரம், இது 6 அடி உயரம் உள்ளது. விசித்திர தாவரங்களும் இங்கே காணப்படுகின்றன.
* விலாங்கு மீனால் மின் அதிர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
* நீலத்திமிங்கலம் சில நேரம் விசிலடிப்பது போல் கத்தும். சுமார் 188 டெசிபல்கள் இருக்கும். அந்த சத்தம் உலகின் எந்த விலங்கின் சத்தத்தை விடவும் மிகவும் அதிகமாக இருக்கும்.
* அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக் கண்டறியப்பட்டிருப்பது இந்தியக் காண்டாமிருகம்.
* உலகிலேயே மிக உயரமான மிருகம் ஒட்டைச்சிவிங்கி.
* ஆப்பிரிக்க நாட்டு யானைகளுக்கு காதுகள் பெரியதாக இருக்கும்.
* காட்டு ராஜாவான சிங்கம் தனது துணைவி சிங்கத்துடனும் மற்றும் குட்டிகள் மேலும் கடைசி வரை பாசமாக இருக்கும். ஆனால் புலி, சிறுத்தை அப்படியிருக்காது.
* மனிதனைப் போலவே நாயும், பூனையும் தூங்கும்போது கனவு காண்கிறதாம்.
* பொதுவாக சிங்கத்திற்கு உணவாக தினசரி 5 கிலோ மாமிசம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் திடமான ஆண் சிங்கங்கள் ஒரே நேரத்தில் 23 கிலோ மாமிசத்தைக்கூடத் தின்னுமாம்.
* பாலூட்டி இனங்களிலே பணிக்கரடிகளுக்கு மட்டும்தான் கால் பாதங்களில் முடிகள் வளரும்.
* 'மேக்ஸ் கேன்ஸ்' எனும் வாலில்லாத பூனைகள் ஐஸ்லாந்து தீவில் உள்ளன. இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள்.
* மின்னல் தாக்கி இறந்த விலங்குகளின் இறைச்சியை பிற விலங்குகள் தின்னாது.
* பூனை, கோழிகளுக்கு இனிப்புச் சுவை தெரியாது.
* வெளவாலுக்குப் பார்வை இல்லை.
* மண்ணுள்ளிப் பாம்புக்குக் கண்களில்லை.
* பாம்பின் கண்களில் இமை இல்லை.
* சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை.
* காண்டாமிருகம் தன் கொம்பினால் தாக்குவது இல்லை.
* அனைத்து துருவ கரடிகளும் இடது கை பழக்கம் உடையவை.
* பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
* ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.
* புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.
* யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும்.
* கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.
* நாய்களால் மனிதனின் முகத்தை பார்த்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்ள முடியும்.
* நெருப்புகோழியால் குதிரையை விட வேகமாக ஓடமுடியும். ஆண் நெருப்புகோழியால் ஒரு சிங்கத்தை போல குரல் எழுப்பமுடியும்
* மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும்.
* மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து முளைக்கிறது.
* நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால் தான் வாலை ஆட்டும்.