விலங்குகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் Interesting facts about animals
* கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.
* பாம்பு பால் குடிப்பதில்லை. பாம்புகள் விஷத்தை சேர்த்து நாகமணி உருவாக்குவதும் கிடையாது.
* பிரான்ஸில் அரசாங்கமே சிகரெட் கம்பெனி நடத்துகிறது.
* நத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை தூங்கும்.
* நீலநிறப் பறவையால் ஊதா நிறத்தைப் பார்க்க முடியாது.
* சீக்கியர்களுக்கு தாடி மதச்சின்னம். தாடி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று ருமேனியா நாட்டில் ஒரு சட்டமே உண்டு.
* நத்தையின் கண்களை வெட்டும்போது புதிய கண்கள் முளைத்து விடுகிறது.
* ஆர்டிக் கடல் எட்டு மாதங்கள் உறைந்திருக்கும்.
* தாய்லாந்தில் கரப்பான் பூச்சியை உணவாகச் சாப்பிடுகிறவர்கள் உண்டு.
* அமேரிக்காவில் ஆண்டுதோறும் அக்டோபர் 31-ஆம் நாள் 'பேய் நாள்' என்று கொண்டாடப்படுகிறது.
* உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் உள்ள நாடு கிரீஸ்.
* தீப்பெட்டிப் படங்களையும் வகை வகையான தீப்பெட்டிகளையும் சேகரிக்கும் பழக்கத்துக்கு 'பிலுமின்ஸ்டோ' என்று பெயர்.
* விண்வெளிக்கு ராக்கெட் மூலம் முதலில் அனுப்பப்பட்ட விலங்கு குரங்கு.
* பாம்பு முட்டையிட்ட பிறகு பெரியதாகி விடும்.
* போக்குவரத்துக்கென காவலர்களே இல்லாத நாடு நியூஸிலாந்து.
* தாய்ப்பால் சேமித்து வைக்கும் நிலையம் லண்டனில் உள்ளது.
* சிறுநீரைக் குடிப்பது சீசரின் வழக்கம். இது சரியா என்று சரியாக நீருபிக்கப்படவில்லை, என்றாலும் இதன் மூலம் பல நோய்கள் தீரும் எனப்படுகிறது. சிறுநீரை மேலே பூசினால் காது – மூக்கு – நோய் தீரும். சிறுநீரால் கழுவினால் கண் நோய் தீரும். இரத்த அழுத்தம் – இதய பலவீனம் நீங்க சிறுநீர் உதவும்.
* ‘ஹோகரிடா’ என்ற தீவில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தாடி,மீசை முளைப்பதில்லை.
* நாம் சிறிய உயிராக நினைக்கும் நத்தைக்கு நாக்கின் அடியில் ஏராளமான பற்கள் இருகின்றன. அதே போல சிறிய கொசுவுக்கு கூட 47 பற்கள் உள்ளன.
* ஓநாயின் வால் அதன் உடல் நீளத்தைவிட இரண்டரை மடங்கு அதிகம் இருக்கும்.
* பிரான்ஸ் நாட்டிலுள்ள பாண்ட்ஸ் டி.சி. என்னும் ஊரில் ஒரு தெரு இரண்டு மைல் நீளமுள்ளது.
* எஸ்கிமோக்கள் சமைக்கப்படாத இறைச்சியை உண்பார்கள்.
* நீரே அருந்தாமல் சிலந்தி ஒரு ஆண்டு வரை உயிர் வாழும்.
* நைலான் துணியில் நாணய நோட்டுகளை அச்சடித்த நாடு ஜெர்மனி.
* நான்கு தீவுகளால் ஆன நாடு ஜப்பான்.
* பிளாஸ்டிக்கில் கரன்ஸி நோட்டுகளை வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா
* அச்சு நாய், அல்சேஷன், பாமரேனியன், ராஜபாளையம் எனப் பலவகை நாயைப் பார்த்திருபோம். ஒருவகை வித்தியாசமான நாய் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த நாய்க்கு அகன்ற கால்கள். அதன் இடையில் வாத்துகளுக்கு இருப்பது போன்ற சவ்வுகள் உள்ளன. இது நீரில் நீந்திட உதவும் அமைப்பு. பிரேசில் நாட்டு மிருகக்காட்சி சாலையில் இந்த இனம் பாதுக்காக்ப்படுகிறது. நாய் தரைவாழ் உயிரினம். ஆதி மனிதன் வேகமாக ஓடப் பழக்கி, வேட்டையாட நாய்களையே பயன்படுத்தினான். நீர்வாழ் உயிரினத்திற்குரிய கால் சவ்வு – வசித்திரம்தானே?
* இந்தியாவில் நீண்ட காலமாகவே பறவை – பாம்பு வழிபாடு உண்டு.
இதுபோல பண்டைய எகிப்தில் பூனையை புனிதமாகக் கருதி, தெய்வமாக வழிபட்டனர். பூனைக்கு கோவில் கூட கட்டப்பட்டதாம். அதோடு பூனையைக் கொல்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாம்.
அதுபோலவே பண்டைய எகிப்தில் முதலையை தெய்வமாக வழப்பட பழக்கமும் இருந்தது. விலங்குகள் மீது ஏற்பட்ட பாசம் மட்டுமல்ல பயமும் வழிபாட்டிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
* ஐரோப்பாவிலுள்ள ஒருவகை சுண்டெலி ஆண்டில் ஆறு மாதங்கள் தூங்கியே கழிக்கும்.
* 'புள்ளிகலவாய்' என்கிற மீன் வகை, எதிரிகளிடமிருந்து தப்பிக்கிறதுல கில்லாடிதான். கடலுக்கு அடியில் பாறைகளுக்கு நடுவே போய் படுத்துக் கொள்ளும். அப்போது பாறைக்கும் இந்த மீனுக்கும் லென்ஸ் வைத்து பார்த்தால் கூட வித்தியாசத்தைக் கண்டு பிடிக்கவே முடியாது.
* சினிமா தியேட்டரே இல்லாத நாடு சவுதி அரேபியா.
* உலகப் புகழ்பெற்ற ஈபில் டவரின் மொத்த படிகட்டுகள் 729.
* ஒன்றல்ல, ஆறாயிரம் தேள்களுடன் அதுவும் 33 நாட்கள் வாழ்ந்த சாதனை மலேசியாவில் 2004-ல் நடந்து கின்னஸில் இடம் பெற்றுள்ளது. நூர்மளினா ஹசன் என்ற 27 வயது பெண்தான் இச்சாதனையாளர். 12 X 10 கண்ணாடிப் பெட்டிக்குள் 6000 தேள்களுடன் 33 நாட்கள் வாழ்ந்து காட்டினார். 2004 ஆகஸ்ட் 21 முதல் இது நடந்தது. தினம் 15 நிமிடம் மட்டும் வெளியில் இருப்பார். மீதி நேரம் உள்ளே தேள்களுடன் வசித்தார். இது உலக சாதனையாகும்.
* வானில் தோன்றும் ஒரு சாதரண மின்னலின் நீளம் 3.7 மைல்களாகும்.
* சிறந்த பேச்சாளரான டெமாஸ்தனிஸ் இளமையில் திக்குவாயாக இருந்தார்.
* எலிசபெத் ராணிக்குப் பிடித்த குதிரை பெயர் வின்ஸ்டன்.
* இந்தியாவில் மழை பெய்யாவிட்டால் கழுதைக்கு திருமணம் செய்விப்பார்கள்.
பெரு நாட்டில் தவளை விக்ரகம் செய்து மலை உச்சிக்கு எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். அப்படி செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை.
* குற்றம் செய்பவரை ‘கேடி’ப்பயல் என்கிறோம். அது K.D. ஆங்கில எழுத்தே. அதன் விளக்கம் Known Depredator என்பது. கைதேர்ந்த திருடன் என்பதே பொருள்.
* பாம்புக்கறியை அதிகமாக உண்ணும் நாடு சீனா.
* துப்பாக்கி சின்னத்தை தேசியக் கொடியில் பொறித்திருக்கும் நாடு மொசாம்பிக்.
* ஸ்காட்லாந்துக்கு அருகிலிருக்கும் ஸ்டாபா தீவிலுள்ள 'பிங்கல்' எனும் குகையில் எழுப்பப்படும் எதிரொலிகள் இசைக் கருவிகளிலிருந்து மீட்டும் இசை போல நீண்ட நேரம் கேட்கிறதாம்.
* அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் தான் அதிக அளவில் அமெரிக்கர்கள் வாழ்கின்றனர்.
* மனிதர்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை கொரில்லா மனித குரங்குகளுக்கும் கொடுத்து கர்ப்பத்தை தவிர்க்க முடியும்.
* விமான விபத்துகளில் ஆண்டுதோறும் மடிபவர்களுக்கு சமமாக கழுதையால் உதைக்கப்படும் மக்கள் மடிகிறார்கள்.
* பேரழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாராம்.
* தைவானில் விற்கப்படும் பிரபல ஆணுறையின் நீளம் 4.2 அங்குலம்.
* துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
* ஹீமாயூன் மன்னன் தனது நூலகப் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார்.
* ஒரு மனிதனுக்கு இரண்டு இதயங்கள் என்றால் நம்ப முடிகிறதா? 19-ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் நேப்பில்ஸ் நகரத்தில் வாழ்ந்த 'ஜியூ செப்பி டிமாய்' என்பவருக்கு இரண்டு இதயங்கள் இருந்தன. 1894-இல் லண்டன் அகாடமி ஆஃப் மெடிசன் அமைப்பு அவருக்கு 15,000 பவுண்டு கொடுத்தது. எதற்குத் தெரியுமா? இறந்த பின் அவரது உடலை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள.
* பெருநாட்டுப் பாலைவனத்தில் மணலே கிடையாது.
* ஒருமுறை இத்தாலி நாட்டிலுள்ள ஹஸ்னியா மாவட்டத்தில் பெய்த மஞ்சள் மழை தெருவெங்கும் மஞ்சள் வெள்ளம் போல் ஓடியது. காற்றில் கலந்துள்ள கந்தகமே மஞ்சள் நிற மழைக்கு காரணம் என்றனர் அறிஞ்ர்கள்.
இதுபோலவே அமெரிக்காவில் ஒருநாள் கருப்பு மழை பெய்தது. நிலக்கரி புகை, ஆலைகளின் கறுப்புப் புகை ஆகியவை காற்றில் கலந்து மாசுபட்டதே கருப்பு மழை பெய்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
* ஒரு காலத்தில் வெளிநாட்டு உணவுப் பொருளான கெட்ச்அப் இன்று இந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதன் அடர்த்தி தன்மை காரணமாக கெட்ச் அப் மிக மெதுவாகத் தான் பாட்டிலிலிருந்து வெளியே வரும். கெட்ச்சப் பாட்டிலிலிருந்து வெளியே வரும் வேகத்தில் ஒரு பொருள் ஒரு இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு நகரத் துவங்கினால் அது 1 ஆண்டிற்கு 25 மைல் தான் கடந்திருக்கும்.
* இன்று லிப்ஸ்டிக் பயன்படுத்தாத பெண்களே இல்லை. பல வண்ண கலர்களில் கிடைக்கிறது. ஆனால் மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான லிப்ஸ்டிக்களில் மீன் செதில்கள் ஒரு முக்கிய இடுபொருளாகச் சேர்க்கப்படுகிறது.
* அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பூமிக்குள் மூழ்கிக் கொண்டேயிருக்கிறதாம். இதற்கு அந்த நூலகம் கட்டப்படும்போது இந்த நூலகத்தில் வைக்கப்படும் புத்தகங்களின் எடையைக் கணக்கிட்டுக் கட்ட மறந்துவிட்டார்களாம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
* நாம் படுத்து உறங்கும் மெத்தைகள் 10 ஆண்டுகளில் நாம் வாங்கும் போது இருந்த எடையைவிட இரண்டு மடங்கு எடையில் இருக்குமாம். 10 ஆண்டு பயன்பாட்டில் தூசு, அழுக்கு, முடி, துணிகளில் உள்ள பஞ்சு, நூல்கள் எனப் பல விதமான பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெத்தைக்குள் சென்று அதன் எடை இரண்டு மடங்காகிவிடுமாம்.
* ஊசி முனையை விடப் பேனா முனை கூர்மையானது என நாம் எல்லோருக்கும் தெரியும். உலகில் சராசரியாக ஆண்டிற்கு 100 பேர் பால்பாயிண்ட் பேனா முனை குத்தி மரணமடைந்திருக்கிறார்கள்.
* மோனாலிசாவிற்கு புருவமும் கிடையாது.