உலகளாவிய மறுசுழற்சி தினம் | Global Recycling Day | March 18
உலகளாவிய மறுசுழற்சி தினம் | Global Recycling Day | March 18
உலக மறுசுழற்சி தினம்:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18ஆம் தேதி உலக மறுசுழற்சி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
மதிப்புமிக்க முதன்மை வளங்களைப் பாதுகாப்பதில் மறுசுழற்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. மறுசுழற்சி முறையை அங்கீகரிப்பதும் அதனை செயல்படுத்த உதவுவதுமே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்தினம் முதன்முதலில் 2018ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது.
இயற்கை வளங்கள் எவ்வளவு வேகமாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வினை மக்களிடையே உருவாக்குவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் உலகின் 7வது வளமாக கருதப்படுகிறது. இது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் இருந்து ஏறத்தாழ 700 மில்லியன் டன்களைக் குறைக்கிறது.