Search This Blog

உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் (Post Office) உள்ள நாடு - பொது அறிவு


* உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் (Post Office) உள்ள நாடு இந்தியாதான்.

* நதிகளுக்கு பொதுவாக பெண் பெயரே இருக்கும். வடஇந்தியா நதியான பிரம்மபுத்ரா நதிக்கு மட்டுமே ஆண் பெயர்.

* இந்தியாவில் பல்வேறு வகைகளில் உடல் ஊனம் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் ஊனமுள்ளோர் அதிகமுள்ள நாட்டில் இந்தியாவும் ஒன்று.

* இந்திய தேசியப் பாடலின் ஆசிரியர் பக்கிம் சந்திர சட்டர்ஜி.

* மக்கள் தொகை மிகக் குறைந்து காணப்படும் மாநிலம் சிக்கிம்.

* இந்தியாவிலுள்ள மலைவாசஸ்தலங்களுள் மிகவும் உயரமானது குல்மார்க் [காஷ்மீர்].

* 'இந்தியாவின் அணிகலன்' என்று  அழைக்கப்படும் மாநிலம் மணிப்பூர்.

* 'இந்தியாவின் நறுமணத் தோட்டம்' என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளம்.

* படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா.

* தெலுங்கு மொழியில் வெளியான முதல் நாவல் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு எழுதிய 'ராஜசேகர சரித்திரா' என்பதாகும்.

* கன்னட மொழியில் வெளியான முதல் நாவல் கெம்பு நாராயணா எழுதிய 'முத்ரமஞ்சசூசா' என்பதாகும்.

* இந்தியாவில் தபால் தலைகள் அச்சிடப்படும் இடம் நாசிக்.

* சபர்மதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் அகமதாபாத்.

* கங்கைக் கரையில் உள்ள மிகப் பழமையான நகரம் ஹரித்துவார்.

* கோமதி ஆற்றங்கரையில் லக்னோ நகரம் அமைந்துள்ளது.

* 'பீகாரின் துயரம்' என வர்ணிக்கப்படும் நதி கோசி நதி.

* இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் இடம் நாசிக்.

* நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஜபல்பூர்.

* கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் நாசிக்.

* இந்தியாவின் முதல் ரத்த வங்கியை 'யு.என்.பிரம்மச்சாரி' என்பவர் 1939-ஆம் ஆண்டு கல்காத்தாவில் தன் 39-வது வயதில் நிறுவினார்.

* நமது நாட்டில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ம் ஆண்டு நடத்தப்பட்டது.

* இந்தியாவின் இணையற்ற கவிஞர் தாகூர். இவரது இயற்பெயர் ரவீந்திரநாத் தாகூர் என்றுதானே நினைக்கிறோம். அவரது இயற்பெயர் ‘பானுசின்கா’ என்பதாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url