உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு
* உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியா.
* மிகப் பெரிய பள்ளி இந்தியாவில் வங்காள மாநிலத்தில் உள்ள சவுத்பாயிண்ட் ஹைஸ்கூல். தற்போது 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே பயில்கின்றனர். முதல் பெண்கள் பள்ளியும் கல்கத்தாவில் துவங்கப்பட்டது. கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலம் மேற்குவங்கம்.
* இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவின் பெயர் கிறிஸ்துமஸ் தீவு. 1643. கிறிஸ்துமஸ் நாளில் இது கண்டுபிடிக்கப் பட்டதால் இப்பெயர் வந்தது.
* இந்தியா விமான சர்வீஸ் AIR INDIA, - INDIAN AIRLINES என்று இருவிதமாக அழைக்கப்படுவது ஏன்? ஏர் இந்தியா என்பது வெளிநாட்டு விமானப் போக்குவரத்து, ஏர்லைன்ஸ் என்பது உள்நாட்டுப் போக்குவரத்தின் பெயர்.
* பீகார் மாநிலத்தில் பொக்காரோ எஃகு தொழிற்சாலை அமைகப்பட்டுள்ளது.
* இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் அணுசக்தி நிலையம் தாராபூர் அணுசக்தி நிலையம்.
* 'அமைதி பள்ளத்தாக்கு' கேரளாவில் உள்ளது.
* இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் நீலகிரி.
* இந்து, புத்த, ஜைன, மதத்தினர் மூவரும் புனிதமாக கருதும் இந்திய நகரம் காசி.
* கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் உத்திரபிரதேசம்.
* இந்தியாவில் சமூக சீர்திருத்தம் என்பதற்கு வித்திட்டவர் ராஜாராம் மோகன்ராய். சாதி ஒழிப்பு – பால்ய விவாகம் தடுப்பு, சதி என்ற உடன் கட்டை ஏறுதலை தடுத்தல் இவர் தொடங்கி வைத்ததே. இவருக்கு துணையாக நின்றவர் அப்போதைய ஆங்கிலக் கவர்னர் பெண்டிங் பிரபு.
* எண்ணிக்கையில் அதிக மாவட்டங்களைக் கொண்ட இந்திய மாநிலம் உத்திரபிரதேசம்.
* முழுக்க முழுக்க கல்வி வளர்ச்சிக்கென மட்டுமே பயன் தரும் செயற்கைக்கோள் என்பதை முதன்முதலில் இந்தியா விண்ணில் அனுப்பியுள்ளது. எந்த உலக நாடுகளும் இதுவரை இத்தைகைய செயற்கைக்கோளை அனுப்பியதில்லை.
இந்த செயற்கைக்கோள் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா தளத்தில் இருந்து 20.09.2004 அன்று ஏவப்பட்டது. இதனை அனுப்ப, 49 மீட்டர் உயரமும், 3 அடுக்குகளையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.எப்.டி. ராக்கெட் மூலம் இது அனுப்பப்பட்டது. 17 நிமிடத்தில் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது.
இந்த செயற்கைக்கோள் 1950 கிலோ எடை உள்ளது. பல்வேறு பல்கலைக் கழக, தொலைதூரக் கல்விக்குப் பயன்படும். ‘எஜுசாட்’ என்பதே இந்த செயற்கைக்கோள். இந்திய அறிவியல் திறனுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
* உலகின் பெரிய, பழமையான பல்கலைக்கழகம் வட இந்தியாவில் இருந்தது. இருந்த இடம் தட்சசீலம். காலம் கி.மு. 700. உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். மருத்துவம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், தத்துவம் எனப் பல்துறைப் படங்கள் போதிக்கப்பட்டன. ஏறத்தாழ 60 வகை படிப்புகள், 10,000 மாணவர்கள் பயின்றனர்.
கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் சிறப்பிடம் பெற்றது, புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம்.