சில பொதுவான தகவல்கள்
* 'தேசபந்து' என அழைக்கப்பட்டவர் சித்தரஞ்சன் தாஸ்.
* முதன்முதலில் இந்தியாவில் நெடுஞ்சாலை அமைத்த ஆங்கிலேய கவர்னர் டல்ஹெளசி.
* 'இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல்.
* இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
* 'காங்கிரஸ் தாத்தா' என அழைக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி.
* 'அரசியலமைப்பின் சிற்பி' என அழைக்கப்பட்டவர் டாக்டர் அம்பேத்கர்.
* நமது நாட்டில் எல்லை பாதுகாப்பு படை 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
* இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் பெண் தலைவி 'அன்னி பெசன்ட் அம்மையார்'.
* மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண் அமைச்சர் 'ராஜகுமாரி அம்ரித் கெளர்' ஆவார்.
* தமிழகத்தில் அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுவதைப் போல், அசாமில் 'பிகு' என்ற பண்டிகையும், பஞ்சாபில் 'பைசாகி'யும், கேரளாவில் 'ஓணம்' பண்டிகையும், ஒரிசாவில் 'ரதயாத்ரா'வும் கொண்டாடப்படுகின்றன.
* அரியானா என்றால் 'கடவுளின் இருப்பிடம்' என்று பொருள்.
* கணக்கில் காட்டப்படாத பணம் கறுப்புப் பணம். இந்தியாவில் 60,000 கோடி கறுப்புப் பணம் உள்ளது.
* சுதந்திர இந்தியாவில் ஓட்டுரிமை உண்டு. 1956 இந்தியன் சட்டப்படி 21 வயதிற்கு ஓட்டுரிமை. திருத்தம் செய்யப்பட்டு தற்போது 18 வயதிற்கு ஓட்டுரிமை உண்டு. அதே அரசியல் சட்டம் ஒருவருக்கு தனது ஓட்டை செலுத்தாமல் இருக்கவும் உரிமை தருகிறது. அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று கூட ஓட்டுப்போடாமல் திரும்பலாம். அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விதிகள் 41-O மற்றும் 49-O. இதனை அளிக்கிறது.