ஒரே துறையில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றிருப்பவர் discovery TNPSC
* ஒரே துறையில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றிருப்பவர் 'ஜான் பார்டீன்' ஒருவர்தான். இவருக்கு முன் மேரி க்யூரி, லினஸ் பாலிங் ஆகியோர் இரண்டு முறை பரிசு பெற்றிருந்தபோதிலும் அது வெவ்வேறு துறைகளில். க்யூரி முதல்முறை இயற்பியலுக்கும் இரண்டாவது முறை வேதியலுக்கும் பெற்றார். அதேபோல் பாலிங்குக்கு ரசாயனம், சமாதானம் ஆகிய துறைகளில் பரிசு வழங்கப்பட்டது. ஜான் பார்டீன் டிரான்சிஸ்டர், சூப்பர் கண்டக்டிவிட்டி ஆகியவற்றை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* நோயாளிகளின் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிக்கு 'இதயத் துடிப்புமானி'(ஸ்டெதஸ்கோப்) என்று பெயர். இதனை 1819-இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'லென்னக்' எனும் விஞ்ஞானி முதன்முதலில் கண்டுபிடித்தார். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு தொடக்கத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிறகு, அனைத்து நாடுகளிலும் இக்கருவி பயன்படுத்தப்பட்டது.
* 17-ஆம் நூற்றாண்டிலேயே 'லவாய்சியர்' என்ற பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி சூரிய அடுப்பின் உதவியால் 'பிளாட்டினம்' எனும் கடினமான உலோகத்தை உருவாக்கினார்.
* உடலில் கல்லீரலை மையமாகக் கொண்டுதான் ரத்தம் ஓடுகிறது என்றார் கி.பி. 150-ஆம் ஆண்டில் வாழ்ந்த அறிவியல் அறிஞர் 'கேலன்'. 17-ஆம் நூற்றாண்டு வரை இது உண்மை என்றே மருத்துவர்கள் நம்பினர். 'வில்லியம் ஹார்வி' என்ற அறிவியல் அறிஞர் ரத்தம் இதயத்திலிருந்து தான் அனுப்பப்படுகிறது என்று கண்டுபிடித்துக் கூறினார்.
* அமெரிக்காவைக் கண்டுபிடிக்க கடல் வழியைக் கொலம்பஸ் பயன்படுத்தினார். அவர் பயணம் செய்த கப்பலின் பெயர் 'சாண்டா மரியா'.
* விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளை பொது நலத்திற்கு பயன்படும் வகையில் சேமித்து வைக்கும் அமைப்பின் பெயர் 'காப்புரிமை அமைப்'பாகும்.
* கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவை கண்டுபிடித்தார்.
* முதன்முதலில் அமெரிக்காவில் 1882ம் ஆண்டு மணியாடர் மூலம் பணம் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
* இன்ஸ்டன்ட் காப்பியை கண்டுபிடித்த நாடு ஜப்பான்.
* காது கேளாதவர்க்கான கல்வி முறை முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
* 'டாம்பேக்' என்கிற அமெரிக்க வானியல் அறிஞர் புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்தவர்.
* பார்வை இழந்தவர்களுக்கான எழுத்து வடிவை தோற்றுவித்தவர் லாயி பிரெய்ல்.
* நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கத்தை கண்டுபிடித்தவர் கே.கிளாஸ் 1884ம் ஆண்டு.
* சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்தவர் சர்.ஐசக் நியூட்டன்.
* உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் 1930ம் ஆண்டு லிவர்பூல், மான்செஸ்டர் இரண்டுக்கும் இடையே ஓடியது.
* 'சர் ஹம்ஃப்ரி டேவி' கண்டுபிடித்த மூன்று தனிமங்கள் பொட்டாசியம், கால்சியம், மக்னீஷியம்.
* அணுவைப் பிளக்க பயன்படும் சாதனம் 'சைக்ளோட்ரான்' ஆகும்.
* சீனாவில்தான் பனிக்கட்டியுடன் இனிப்பு ருசி சேர்த்து ஐஸ்-க்ரீம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.
* தாமஸ் ஆல்வா எடிசன் மொத்தம் 42 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1,097 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
* எந்தப் பொருளை மேலே வீசினாலும் அது கீழே வந்துவிடும். காரணம் புவிக்கு தன்பால் ஈர்க்கும் சக்தி உண்டு. இதுவே புவி ஈர்க்கும் விசை. இதனால்தான் பொருள்களுக்கு எடை ஏற்படுகிறது. குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சென்றால் புவிக்கு ஈர்க்கும் சக்தி கிடையாது. அப்போது அங்கே எடை குறையும். வானத்தில் மிதக்கும் நிலை வரும். இதனை அறிந்து சொன்னவர் சர் ஐசக் நியூட்டன். தன் வீட்டுத் தோட்டத்தில் பழுத்து விழுந்த ஆப்பிள் பழத்தைப் பார்த்து, அது ஏன் கீழே விழுகிறது என சிந்தித்ததின் விளைவே இது.
* சீனா வங்கி தான் முதன் முறையாக [செக்] காசோலை டிராப்ட் முறையை அறிமுகம் செய்தது.18ம் நூற்றாண்டில் தான் நடைமுறைக்கு வந்தது.
* நார்வே நாட்டைச் சேர்ந்த 'ஜான் வாலர்' குண்டூசியால் காகிதங்களை குத்துவதை விட்டுவிட்டு வளைத்துப் போட்டு இடைவெளியில் செருகும் யோசனையைக்கண்டுபிடித்து அதன் 'பேட்டன்ட்' உரிமையை ஜெம் கம்பெனிக்கு சகாய விலைக்கு விற்றுவிட்டார். அவர் கண்டுபிடித்ததைத்தான் இன்று அனைவரும் 'ஜெம் கிளிப்' என்று அழைக்கின்றனர்.
* மைக்ரோவேவ் ஓவன்கள் 1967-ஆம் ஆண்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டன.
1926-ஆம் ஆண்டில் முதல் ஏ.சி. இயந்திரம் தயாரிக்கப் பட்டது.
உலகின் முதல் வாஷிங் மெஷின் 1907-இல் உருவாக்கப் பட்டது.
* குடிக்கும் சோடா முதன்முதலில் 1821ம் ஆண்டு கொல்கத்தா நகரில் விற்பனைக்கு வந்தது.
* நமது நாட்டில் முதன்முதலாக மகளிர் காவல் நிலையம் கோழிக்கோட்டில் தொடங்கப்பட்டது.[கேரளா].
* இரும்புத் தாதுவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலம் கர்நாடகம்.
* கதிர் இயக்கத்தில் விகிதப் பொருத்தமான எலக்ட்ரான்கள் வெளியாக்கப்படுகின்றன எனும் கொள்கையைக் கண்டுபிடித்தவர் ‘மாக்ஸ் ஃப்ளாங்’.
* கடித உறை (Cover) கண்டுபிடித்தவர் பியார்சன். இவர் அமெரிக்கர். ஆண்டு 1839.
* சமைக்கப் பயன்படும் ஓட்டாத பாத்திரங்களின் (நான் ஸ்டிக்) உள்ளே பூசப்பட்டிருக்கும் வேதிப்பொருள் ‘டெஃப்லான்’. இதை கண்டுபிடித்த வேதியியல் அறிஞர்கள் ‘ஜே.ராய்’ மற்றும் ‘பிளங்கெட்ப்’ ஆவர்.
* நவீன பாராளுமன்ற முறையை உருவாக்கிய இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்ட்.
* ‘மவுத் ஆர்கன்’ என்ற இசைக்கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ‘புச்மான்’ என்பவர் ஆவார்.
* உலகின் அதிவிரைவு விமானம் கான்கார்ட். மணிக்கு 2000 கி.மீ. வேகம் செல்லக்கூடியது. ஃபிரான்ஸ் நாட்டு விமானம். விபத்து காரணமாக இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
* வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
* இந்தியாவில் முதல் சோதனைக் குழாய் குழந்தை ஜீன் மாதம் 1986ம் ஆண்டு பிறந்தது.
* பாராசூட்டை முதன்முதலாக உபயோகித்தவர் ஜே.கர்னெரின். இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். 1797ம் ஆண்டு அக்டோபர் 22ம் நாள் இந்த நிகழ்ச்சியை நடந்தினார்.
* சந்திரனில் மலைகள் உள்ளன எனக் கண்டறிந்தவர் கலிலியோ.
* முதன்முதலில் சித்திரக் கதைகள் {காமிக்ஸ்} அமெரிக்காவில் தோன்றியது.
* எலிவேட்டர் எனும் நகரும் படிக்கட்டுகளை கண்டுபிடித்தவர் எலிஷ் ஜீ ஓடிஸ்.
* இப்போதுதான் டீசல் இரயில், மின்சார இரயில். ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது நீராவி இரயில் தான். இந்த நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தவர் ஸ்டீவன்சன்.
இவர் இதனைக் கண்டுபிடிக்க அடிப்படை என்ன தெரியுமா? அவர் வீட்டில் கெட்டில் ஒன்றில் வெந்நீர் நீராவியால், மேலே மூடியிருந்த தட்டைத் தள்ளி, அது கீழே விழுந்த நிகழ்ச்சிதான். இதில் இருந்து நீராவிக்கு தள்ளும் சக்தி உண்டு எனக் கண்டு, அதன் மூலம் ஒரு இன்ஜினை இயக்கலாம் எனக் கற்பனை செய்தார். அதுவே புதிய கண்டுபிடிப்புக்கு வித்தானது.
* முதன்முதலில் டென்னிஸ் விளையாட்டை மேஜர் வால்டன் கிளாப் டன்விங் பீல்டு என்பவர் தான் 1873ம் ஆண்டு கண்டுபிடித்தார்.
* ஒரு நீச்சல் குளம், குளியல் தொட்டி, தண்ணீர் படுக்கை, 3 டி.வி-க்கள், சமையல் அறை, விருந்தினர் அறை, மேலே ஹெலிகாப்டர் தளம் இவை எதில் தெரியுமா? ஒரு காரில் தான். இது ஹாலிவுட் நகரில் உள்ளது. இதன் நீளம் 60 அடி. எடை 20000 பவுண்ட். சக்கரங்கள் 4 அல்ல 16. இரண்டு என்ஜின். (சாலையில் ஓட அனுமதியில்லை – வீட்டைச் சுற்றி ஓட்டலாம்). அமெரிக்காவின் அறிய தயாரிப்பு இது.
* இரும்பிலிருந்து எஃகுவை உருவாக்கியவர் ஹென்றி பெல்னியர்.
* கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை 1950-ல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. ப்ராங்க் மெக் நமாரா என்ற தொழில் அதிபர்தான் தொடங்கி வைத்தார். ஒரு சமயம் பணம் எடுக்க மறந்து ஓட்டல் சென்று – பில் கொடுத்ததும் பணமில்லாது தவித்த அனுபவத்தின் தீர்வே இந்த கிரெடிட் கார்டு கண்டுபிடிப்பு.
* ஒருவன் பேசும் போது அவன் உடலில் ஒரு கருவியை இணைத்துவிட்டால் அவன் பேசுவது – பொய்யா? மெய்யா? என அறிய முடியும். இதற்குப் பெயர் பாளிகிராப். காவல்துறை விசாரணைக்கு இது பயன்படும். இது 1921-இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜான் ஏலர்கன் என்ற மருத்துவ மாணவன் (அமெரிக்கா – கலிபோர்னியா பல்கலைக்கழகம்) கண்டுபிடித்தது இது.
* மின்சார விளக்கைக் கண்டு பிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். 1880இல் ஜனவரி 1இல் புத்தாண்டு தினத்தில் நியூயார்க் நகரில் 800 மின்சார விளக்கை எரியவிட்டு உலகையே வியக்க வைத்தார் எடிசன்.
* போன் செய்பவரின் எண் மட்டுமின்றி அவரின் பெயரையும் கூறும் 'பேசும் டெலிபோன்' அமெரிக்காவின் அடெட் நிறுவனம் கண்டுபிடித்தது.
* மோகினி ஆட்டம் என்ற நடனம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தது.
* வாலிபால் விளையாட்டைக் கண்டுபிடித்தவர் 'வில்லியம் ஜார்ஜ் மார்கன்'.
* பாரா மீட்டரைக் கண்டுபிடித்தவர் டாரி என்பவர்.
* ஒருவர் தினமும் சராசரியாக 16 கி.மீட்டர் தூரம் வரை நடக்கிறார்.
* உலகில் அம்மாவின் பெயரில் முதல் எழுத்தை முதன் முதலாக தலையெழுத்தாக [இனிஷியல்] பயன்படுத்தியவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
* கலிலியோவின் முதல் கண்டுபிடிப்பு பெண்டுலம்.
* டொமினிகா என்ற தீவை 1493-ஆம் ஆண்டு கொலம்பஸ் என்பவர் கண்டுபிடித்தார்.
* முதன்முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்தவர் ‘நோஹ்வெப்ஸ்டர்’ என்ற அமெரிக்கர்.
* கலிலியோ தனி ஊசலைக் (பெண்டுலம்) கண்டுபிடித்த போது அவருக்கு வயது 17.
* தொலைநோக்கி இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட கோள் புளூட்டோ.
* இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் 'பெஞ்சமின் ஃபிராங்க்ளின்'.
* அமெரிக்காவைச் சேர்ந்த 'ஒயிட் கோம்ப் ஜட்சன்' என்பவர்தான் முதன்முதலில் இரும்பாலான ஜிப்பைக் கண்டுபிடித்தார். தற்போது பிளாஸ்டிக் மற்றும் நைலான் ஜிப்புகள் மிக எளிமையாகவும் கனமில்லாமலும் தயாரிக்கப்படுகின்றன.
* இன்று நாம் பயன்படுத்தும் கேள்விக்குறி மற்றும் புள்ளி ஆகிய அடையாள முறைகளை இத்தாலியர்கள் கண்டுபிடித்தார்கள்.
* கமா (,), செமிகோலன் (;), கோலன் (:) ஆகியவற்றை கிரேக்கர்கள் கண்டுபிடித்தனர்.
* சமன்பாட்டிற்காகப் போடப்படும் (=) 'சமம்' எனும் அடையாளத்தைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டினர்.
* வயலின் இசைக்கருவியிலுள்ள வில்லின் நீளம் 70 சென்டிமீட்டராகும்.
* கருவேல மரத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை ஜெய்ப்பூரிலுள்ள மரபு சாரா எரிசக்தி மையம் கண்டுபிடித்து நாடு முழுவதும் பிரபலமாக்கி வருகிறது.
* செயின்ட் பால் கதீட்ரலை வடிவமைத்தவர் 'சர் கிறிஸ்டோபர் ரென்' என்பவர்.
* ஹோமியோபதி வைத்திய முறையைக் கண்டுபிடித்தவர் 'சாமுவேல் கிறிஸ்டியன் பிரடெரிக் ஹானிமன்'.
* பர்மாவில் தான் கிளி ஜோசியம் தோன்றியது.
* உலகின் முதல் புகைப்படத்தை உருவாக்கியவர் ஜோசப் நைஸ் போர் நீப்ஸே.
* எய்ட்ஸ் வைரஸை முதன் முதலில் கண்டறிந்த நாடு அமெரிக்கா.
* ரேடியோவைக் கண்டுபிடித்த மார்க்கோனி, 1907-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
* 1498ம் ஆண்டு இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்து வந்த மாலுமி வாஸ்கோடகாமா.
* விஷத்தைக் கண்டுபிடித்தவர் எஸ்.என். போஸ்.
* யுரேனியம் என்ற தனிமம் 'இ.எம்.பெளிகாட்' என்பவரால் 1841-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
* உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி. இவர் பல துறைகளில் திறமை வாய்ந்தவராக விளங்கினார். இவர் தான் நாம் இன்று பயன்படுத்தும் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தார்.
* மின்சார நாற்காலி ஒரு பல் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது.