Search This Blog

ஆசியாவின் இத்தாலி இந்திய பொது தகவல்கள்

* ‘ஆசியாவின்  இத்தாலி’ என அழைக்கப்படும் நாடு இந்தியா.

* இந்தியர்கள் விசா இல்லாமல் போகும் வெளிநாடு பூடான்.

* ‘இந்தியாவின் தொழில் நகரம்’ என மும்பை அழைக்கப்படுகிறது.

* கம்பு, சோளம் அதிகமாக விளையும் மாநிலம் மகாராஷ்டிரம்.

கோதுமை, கரும்பு ஆகியவை அதிகமாக விளையும் மாநிலம் உத்தரப்பிரதேசம்.

தேங்காய் அதிகமாக விளையும் மாநிலம் கேரளா.

பருத்தி, நிலக்கடலை ஆகியவை அதிகமாக விளையும் மாநிலம் குஜராத்.

பருப்பு வகைகள்  ஆகியவை அதிகமாக விளையும் மாநிலம் மத்தியப்பிரதேசம்.

* இந்தியா முன்னேற வேண்டுமானால் கிராமங்கள் முன்னேற வேண்டும் என்று கூறியவர் ரவீந்திரநாத் தாகூர்.

* இந்தியாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு மத்திய கேபினட் அமைச்சருக்குரிய அந்தஸ்து அளிக்கப் படுகிறது.

* 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று பிரிட்டிஷார் அழைத்த பகுதி கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு பகுதியாகும்.

* உலகில் கஸ்தூரி மான்கள் அதிகம் காணப்படும் பகுதி இமய மலை ஆகும்.

* உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் ரயில் பயண சேவையை அளிப்பது இந்திய ரயில்வேதான்.

* உலகிலேயே அதிக அளவு பணியாளர்களை கொண்ட அரசுத்துறை இந்திய ரயில்வே துறைதான்.

* இந்திய ரயில்வே 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

* இந்தியாவில் தினசரி 14,400 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* இந்தியாவில் மலை, கடல், ஏரி, பாலைவனம், ஆறு, சமவெளி ஆகிய அனைத்து பகுதிகளிலும் ரயில் சேவை நடைபெறுகிறது.

* நமது நாட்டில் முதல் எண்ணெய் கிணறு அசாம் மாநிலத்தில் 1889ல் தோண்டப்பட்டது.

* குச்சிப்புடி நடனம் என்பது ஆந்திராவில் புகழ்பெற்ற பாரம்பரிய நடனம் ஆகும்.

* இமாச்சல பிரதேசத்தின் தலைநகரம் 'சிம்லா'.

* உலகிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியா.

* இந்தியாவில் 12 வகையான மான் இனங்கள் உள்ளன.

* இந்தியத் தபால்தலை முதன்முதலாக கராச்சியில்தான் வெளியிடப்பட்டது.

* உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்கு வங்கத்திலுள்ள 'கரக்பூர்' என்ற நகரத்தில் உள்ளது.

* இந்தியாவின் முதல் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சாவித்ரி.

* முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டு நடைபெற்றது.

* இந்தியத் தொழிற்சாலைகளின் தந்தை என்பவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா.

* இந்திய அறிவியல் கழகம் பெங்களூரில் உள்ளது.

* நமது நாட்டில் [இந்தியா] தரைப்படை வீரர்கள் பயிற்சிக் கல்லூரி புனாவில் உள்ளது. [டேராடூன்].

* இந்திய சுதந்திரப் போரில் ஒரு கொடுமையான நிகழ்ச்சியே பஞ்சாப் படுகொலை. இதுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்படுவதும். பஞ்சாபில், ஜாலியன் வாலபாக் என்ற இடத்தில், மிக அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த பொதுக் கூட்டத்தில், ஜெனரல் டயர் என்ற ஆங்கிலத் தளபதி நடத்திய துப்பாக்கி சூடு இது. 379 பேர் இறந்து 1200 பேர் காயம் அடைந்தனர். ஒரே வாசல் உள்ள காம்பௌண்டுடன் கூடிய மைதானம் அது. தப்பியோட வழியில்லாத இடம்.

* இந்தியாவில் 167 கலங்கரை விளக்கங்கள் உள்ளன.

* 'இந்தியாவின் பூலோக சொர்க்கம்' என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அழைக்கப்படுகிறது.

* தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்ட தலைவர் டாக்டர் அம்பேத்கர்.

* மும்பைக்கும் தாணாவுக்குமிடையே முதல் முதலாக ரயில் பாதை போடப்பட்ட ஆண்டு 1853.

* இந்தியாவில் ஜனத்தொகை அதிகம் உள்ள மாநிலம் கொல்கத்தா.

* 'தென்னிந்தியாவின் வெனிஸ்' என்று அழைக்கப்படுவது ஆழப்புழை நகரம்.

* இந்தியாவில் நீண்ட தூரத்திற்கு ஓடும் 2வது எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் கெளஹாத்தி = திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 3574 கி.மீ.தூரம்.

* ஹிராகுட் அணையின் மின் திட்டம் மூலம் பயன்பெறும் மாநிலங்கள் மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம்.

* சதிஷ்கர், உத்ராஞ்சல், ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்கள் 2006ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி உதயமானது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url