Search This Blog

இந்தியாவின் துயர நதி'

இந்தியாவின் மிகப்பெரிய நூல் நிலையம் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூல் நிலையம் ஆகும்.

* இந்தியாவில் பல்வேறு இன மக்கள் உண்டு. இவர்கள் பற்றிய ஆங்கிலேயர் மதிப்பீடு ஒன்று:

Punjabi to fight

Bengali is wise

Madarasi to eat……

எப்படி? பஞ்சாப்காரர்கள் நன்கு சண்டை போடுவார்கள். பெங்காலிக்காரர் புத்திசாலிகள். மதராசிகள் நன்கு சாப்பிடுவார்கள் என்பது அவர்கள் கணிப்பு.

* இந்தியாவில் ஆங்கிலேயக் கல்வியைத் தொடங்கியவர் வில்லியம் பெண்டிங் பிரபு.

* இமயமலை ஏறுவதற்கு பயிற்சி அளிக்கும் மையம் டார்ஜிலிங் நகரில் உள்ளது.

* தில்லி நகருக்கு ‘புதுதில்லி’ என்ற பெயர் 1931 –ஆம் ஆண்டு சூட்டப்பட்டது.

* இந்தியாவில் 1,177 வகையான பறவை இனங்களும், 389 வகையான ஊர்வனவும் வாழ்கின்றன.

* எட்டு வயதிற்குட்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. அதற்கு மேற்பட்டால் சீர்திருத்தப் பள்ளியிலும், 18 வயதைத் தாண்டியவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவார்கள்.

* பகாய் கோயில் டெல்லியில் உள்ளது. சமீப காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தாமரைப்பூ வடிவில் இருக்கும். இதனால் இதற்கு தாமரைக்கோயில் (lotus Temple) என்றும் பெயர். இதனைக் கட்டியவர் பகாய் நம்பிக்கை கொண்டவர்கள். இந்த கருத்துப்படி மதம் – சாதி – இனம் பெரிதல்ல. எல்லாமே சமம். யாவரும் ஒருவரே. கடவுள் ஒருவரே. அவரே புனிதமானவர். அவரே உண்மையானவர். இதில் யார் வேண்டுமானாலும் நுழையலாம். எப்படி வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம்.

* இந்தியா என்ற பெயர் ஆரியர் வருகைக்குபின் ஏற்பட்ட பெயர். அதற்கு முன்பு நம்நாட்டுப் பெயர் பாரதநாடு, அல்லாத பரத கண்டம் என்று பெயர் இருந்தது. பரதனால் ஆளப்பட்ட நாடு என்பது பொருள். சரி. அப்பரதன் என்பவன் யார்? துஷ்யந்தன் – சகுந்தலா இருவருக்கும் பிறந்தவன் பரதன் என்பது ஒரு கருத்து. சிலர் இதனை மறுத்து, ஜைன மதத்தின் தொல்லாசிரியர் விருஹபதேவர் என்பவரின் மகன் என்றும் கூறுவர்.

சரி.... அந்த பரதனுக்கு முன்பு... என்ன பெயர் இருந்திருக்கும்? ‘நாவலந்தீவு’ என்ற பெயர் இருந்ததாகக் கூறுவார்கள். (இதனையும் மறுப்பவர் உண்டு).

* தெய்வங்களுக்கு கோவில் அதிசயமல்ல. பாரத மாதா (இந்தியத்தாய்)வுக்கும் ஒரு கோவில். குஜராத் மாநிலம் போர்பந்தரில் (காந்தி பிறந்த மண்) இக்கோவில் உண்டு. பெரிய இந்தியப் படம் ஒன்று தரையில் பதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில சிறப்புகளை அதில் பொறித்துள்ளார்கள். சுவர் முழுவதும் சுதந்திரப் போராட்டச் செய்திகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

* நமது தமிழ்நாட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல் வடநாட்டில் தீபாவளியின் போது தீபம் ஏற்றுவது வழக்கம். அதைவிட நேபாளத்தில் தீபாவளியை 5 நாள் கொண்டாடுவார்கள். சேவல், நாய், பசுவை அப்போது அலங்கரிப்பது வழக்கம்.

* இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 50 சதவீதம் பேர் உடல் பருமன் கொண்டவர்கள்.

தில்லியில் வசிக்கும் 45 சதவீத ஆண்களுக்கும், 55 சதவீத பெண்களுக்கும் உடல் பருமனாக உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

* இந்துக்களின் புனித ஸ்தலமான 'ரிஷிகேஷ்' உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.

* இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும், 142 சிறிய துறைமுகங்களும் உள்ளன.

* தப்தி நதிக்கரையில் ஆந்திராவிலுள்ள மசூலிப் பட்டணம் அமைந்துள்ளது.

* 'இந்தியாவின் துயர நதி' என அழைக்கப்படும் நதி கோசி நதி ஆகும்.

* முதன்முதலில் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு ராணுவத்தின் மரியாதையைப் பெற்ற இந்திய ராணுவத் தளபதி 'ஜெனரல் ஜோஹி'.

* இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் 'கொல்கத்தா'.

* தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் 340 அறைகள் உள்ளன. இது 330 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 'எட்வின்' என்பவர் இதைக் கட்டினார்.

* திருப்பதி மலை கிழக்கு மலைத் தொடரில் அமைந்துள்ளது.

* உலகின் மிகப் பழங்கால மனிதர்கள் எனப்படும் சிலவகை ஆதிவாசிகள் இன்னும் அந்தமான் தீவில் வசிக்கின்றனர். ஆடையின்றி அலையும் இவர்கள் இனம் மிகவும் அழிந்து வருகிறது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாது தனித்து வாழும் இவர்கள் ஆபத்தானவர்கள். வேற்று இன மக்கள் கண்டால் விஷ அம்பு எய்தி கொள்ளத் துவங்குவார்கள்.

* இந்திய சுதந்திரப் புரட்சி ஆரம்பமான இடம் 'பாரக்பூர்'.

* ஃபிஜி தீவில் இந்தியர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

* இந்தியாவில் மிகக் குளிர்ச்சியான பகுதி லடாக்கிலுள்ள 'ட்ராஸ்'.

* இந்தியக் காடுகளில் மரங்களின் ராஜா என அழைக்கப்படுவது தேக்கு மரம்.

* இந்தியா பற்றிய மிகப் பழங்கலத்தில் எழுதப்பட்ட நூல் ‘இண்டிகா’. இதனை எழுதியவர் மெகஸ்தனிஸ். பழங்கலத்தில் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்தவர். சிறந்த பழங்கால வரலாற்றுச் சான்று இது.

* இந்தியாவின் தேசிய மலர் தாமரை, இது தெரியும். பூவரசம் பூவை தேசியப் பூவாக வைத்துள்ள நாடு எது? இரண்டு நாடுகள். ஒன்று ஹங்கேரி. மற்றது ருமேனியா.

* இந்தியாவின் சிறந்த பரிசான ஞானபீட விருதை முதன்முதலில் பெற்ற தமிழ் எழுத்தாளர் அகிலன்.

* உலகின் பெரிய மலை எவரஸ்ட் சிகரம் (உயரிய சிகரம்) கொண்ட இமயமலை. இது இந்தியாவின் வடக்கு எல்லை. சரி. எவரெஸ்ட் சிகர உயரம் எவ்வளவு தெரியுமா? 8848 மீட்டர்.

* நிக்கல் கிடைக்கும் ஒரே மாநிலம் ஒரிஸ்ஸா[இந்தியா] .

* இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருது 'பாரத ரத்னா' ஆகும். அதுபோல, பாகிஸ்தான் நாட்டில் 'நிஷான்-ஏ-பாகிஸ்தான்' என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த இரண்டு விருதுகளையும் பெற்றவர் என்ற பெருமை மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு உண்டு.

* இந்தியாவில் முதல் தொழிற்சாலையை சென்னையில் தாமஸ்பாலி என்பவர் 1805ம் ஆண்டு அமைத்தார் 

* அமிர்தசரஸ் பொற்கோயிலின் தங்கத் தூணின் பெயர் 'நிஷான் சாஹிப்'

* நமது நாட்டில் முதல் ஐந்தாண்டு திட்டம் 1951, 1952ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

* கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர் 'இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம்'.

* ஜெய்ப்பூர் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் ‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என அழைக்கப்படுகிறது.

அமிர்தசரஸ் நகரம் ‘பொற்கோவில்  நகரம் என அழைக்கப்படுகிறது.

லாசா ‘விலக்கப்பட்ட நகரம்’ ஏன அழைக்கப்படுகிறது.

கொச்சி ‘அரபிக்கடலின் ராணி’ ஏன அழைக்கப்படுகிறது .

* இந்தியாவில் முதல் அச்சகம் 1556ம் ஆண்டு கோவாவில் அமைக்கப்பட்டது.

* மத்திய அரசின் புகையிலை ஆராய்ச்சி நிலையம் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் உள்ளது.

* கொல்கத்தா நகரம் கி.பி.1690ம் ஆண்டு நிறுவப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url