மேட்டூர் அணையை வடிவமைத்தவர்
* எண் கணிதத்தில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 இதுவும், (0) பூஜ்யமும் இந்தியா உலகிற்கு அளித்த நன்கொடை. இந்தோ – அரேபியா முறை என இது வழங்கப்படுகிறது. வெளியுலகிற்கு இதனை அறிமுகம் செய்தவர்கள் அரேபியா வணிகர்கள். அதுபோல அல்ஜிப்ரா கணிதமும் இந்தியா வழங்கியதே.
* உடல் பருமன் அதிகமுள்ள மக்கள் வசிக்கும் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
* இத்தாலி – பைசா நகரில் ஒரு சாய்ந்த கோபுரம் இருப்பதும், அது உலக அதிசயத்தில் ஒன்று என்பதும் தெரியும். ஒரு சாய்ந்த கோபுரம் இந்தியாவிலும் உள்ளது. ஒரிஸா மாநிலத்தில் ஹியூமா என்ற கிராமத்தில் இது உள்ளது. 47 கோணத்தில் இது சாய்வாக உள்ளது. 1670 கி.பி.யில் பளியர்சிங் என்ற அரசரால் கட்டப்பட்டது.
* இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 19.39 சதவீதம் காடுகள்தான்.
* கங்கை ஆறு உற்பத்தியாகும் இடம் கங்கோத்ரி.
* இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் 'சுரேந்திரநாத் பானர்ஜி'.
* ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் வேலை நாட்கள் மிகவும் குறைவாக உள்ளன.
* இந்தியா 2004 – தேர்தல் – உலக அளவில் அதிக மின் அணு சாதனம் மூலம் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதனை புரிந்தது. பெரிய நாடுகளில் கூட இன்றும் வாக்குச் சீட்டே பயன்படுத்தப்படுகிறது.
* நூலக அறிஞர் ரங்கநாதன் ‘இந்திய நூலகவியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
* அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் மேற்கு வங்காளம்.
* தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு கோதாவரி.
* தார் பாலைவனம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் , குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன.
* நமது நாட்டின் ரூபாய் நோட்டில் 15 மொழிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
* நமது நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி 50வது வயதில் வழங்கப்படுகிறது.
* மேட்டூர் அணையை வடிவமைத்தவர் விஸ்வேஸ்வரய்யா.
* இந்தியாவில் நிலக்கரி அதிகமாகக் கிடைக்கும் மாநிலம் பீஹார்.
* உலகிலேயே எழுத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட சட்டங்கள் அதிகமிருப்பது இந்தியாவில் மட்டும் தான்.
* உலகின் மிக நீளமான காவியம் மகாபாரதம்.
* இந்தியாவிலும் மிக ஆடம்பரமான ரயில்கள் உள்ளன. டெல்லியில் இருந்து ஜெய்பூர் செல்லும் ஒரு ஆடம்பர ரயில் ‘பாலஸ் ஆன் வீல்ஸ்.’ ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதி இதில் உண்டு. இதுபோல் வேறு ஒரு ரயில் மும்பை – கோவா செல்கிறது. பெயர் டெக்கான். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வது. கட்டணம் மிக அதிகம்.
* ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம் மேற்கு வங்காளம்.
* ராஜ்ய சபாவில் நடக்கும் கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் துணை குடியரசுத் தலைவர்.
* இந்தியாவிலுள்ள மிகப்பெரிய ஏரி ஒரிசாவிலுள்ள சிலிகா ஏரிதான். இதன் பரப்பளவு 100 கி.மீட்டர் ஆகும்.
* மோட்டார் சைக்கிள் டாக்ஸி, இந்தியாவில் கோவாவில் உள்ளது. மோட்டார் சைக்கிளில் ஏறி – வாடகை செலுத்தி பயணம் செய்யலாம். ஆட்டோ கட்டணத்தை விட குறைவு. சுலபமாக – விரைவில் குறிப்பட்ட இடத்தை அடையலாம்.
* இந்தியாவின் தலைநகர் புதுதில்லி 1911-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.