பொது அறிவு தகவல்கள்
* டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் இருக்குமிடம் ஜாம்ஷெட்பூர்.
* எலிபெண்டா குகைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளன.
* ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுவது காஷ்மீர்.
* ஆசியாவிலேயே மிகப்பெரிய கதிட்ரல் சர்ச் கோவாவில் உள்ளது.
* இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம் கர்நாடகா.
* இந்தியாவின் தலைமை வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும்.
* தமிழில் எழுதப்பட்ட ராமாயணம் ‘கம்ப ராமாயணம்’ என்றும், வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணம் ‘வால்மீகி ராமாயணம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகச் சிறிய பெயர் கொண்ட ஊர் ‘யூன்’ இரண்டெழுத்துப் பெயர். உ..பி. மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் காடுகள் அதிகம் உள்ள மாநிலம் அஸ்ஸாம்.
* மக்னீஸியம் அதிகமாகக் காணப்படும் மாநிலம் ஒரிஸ்ஸா.
* இந்தியாவின் தேசியச் சின்னம் அசோக சின்னம்.
* இந்தியாவில் முதல் நாவல் பிரேம்சந்த் எழுதிய சேவாசதன், தமிழில் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’.
* நமது நாட்டில் சுற்றுச் சூழலுக்குத் தனித்துறை கி.பி.1980ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
* விதவைத் திருமணத்தை முதலில் ஆதரித்தவர் இந்து பத்திரிகை ஆசிரியராக இருந்த திரு. ஜி. சுப்பிரமணிய ஐயர். இவர் தனது மகளை மறுமணம் செய்து கொடுத்தார். மகள் பெயர் சிவப்பிரியை. மணமகன் இராமசாமி. சிவப்பிரியை. 12 வயதில் விதவையானவர். 1889 பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் இத்திருமணம் நடந்தது.
* சிவன் – பிரம்மா – விஷ்ணு ஆகிய இந்து மத மூன்று கடவுள்கள் மும்மமூர்த்திகள் எனப்பட்டனர். பிரம்மா படைக்கும் கடவுள். விஷ்ணு காக்கும் கடவுள். சிவன் அழிக்கும் கடவுள்.
* முந்திரிக் கொட்டையை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் இந்திய மாநிலம் கேரளா.
* இந்திய ஆறுகளில் புனிதமானது எனப் போற்றப்படும் ஆறு கங்கையாறு. உலகின் நீளமான ஆறுகளில் இதுவும் ஒன்று. 2490 கி.மீ. நீளம். இமயமலையில் 4120 மீட்டர் உயரத்தில் கங்கோத்ரி என்ற இடத்தில் இது தோன்றுகிறது. யமுனை – ராமகங்கை, கோமதி, பிரம்மபுத்ரா இதனுடன் கலக்கிறது.
* நமது நாட்டில் முதன்முதலாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இடம் ராணிகஞ்ச்.
* பதினாறு வகை கணபதிகளை 'சோடச கணபதி'கள் என்பர். அவை முறையே பால கணபதி, தருண கணபதி, பக்த கணபதி, வீர கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்ந ராஜ கணபதி, க்ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மஹா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி, சக்தி கணபதி, சித்தி-புத்தி கணபதி, கற்பக கணபதி ஆகும்.
* தீபாவளியன்று காசியிலுள்ள அன்னபூரணி கோயிலில் லட்டுகளால் செய்யப்பட்ட தேர் பவனி வருகிறது.
* தப்தி நதிக்கரையில் [முகத்துவாரத்தில்] காணப்படும் நகரம் சூரத்.
* இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியபோது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் அட்லி பிரபு.
* சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1985.
* விளையாட்டுத் துறை பயிற்சியாளருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது துரோணாச்சாரியார் விருதாகும்.
* இந்திய நாணயம் தசம முறையில் 1957-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று அமலானது.