உலகிலேயே மிதக்கும் பூங்கா - பொது அறிவியல்
உலகிலேயே மிக மெதுவாகப் பறக்கும் பறவை 'வுட்காக்'. இது மணிக்கு எட்டு கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.
* இந்தியாவில் கி.பி.1790-இல் தான் முதன்முதலில் இயந்திரம் மூலம் அச்சடிக்கப்பட்ட நாணயம் வெளி வந்தது.
* நமது தேசியக் கொடியை உருவாக்கியவர் பிக்காஜி ருஸ்தம்காமா இதில் நடுவே அசோகச் சக்கரமா? ராட்டையா? என்ற சர்ச்சை எழுந்தது. மகாத்மா காந்தி ராட்டையை வைக்கவே விரும்பினார்.
ஆனால் அம்பேத்கார் அசோகச் சக்கரம் இருக்க ஆசைப்பட்டார். இறுதியில் காந்தி விட்டுக்கொடுக்க, அம்பேத்கார் விருப்பமே நிறைவேறியது.
* கஜுராஹோ, அழகான – கவர்ச்சியான – காமசாஸ்திரக் காட்சிகளை சிற்பமாகக் கொண்ட கோவில். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.
* வால்மீகி முனிவருக்கும் கோவில் உண்டு. இது மேல் விசாரம் (வட ஆற்காடு) என்ற ஊரில் உள்ளது.
லட்சுமிக்கு தனிக்கோயில் மும்பையில் உள்ளது.
ஒளவையாருக்கும் கோவில் உண்டு. இது துளசியா பட்டினம் (நாகை வேதாராண்யம் பகுதி) என்ற ஊரில் உள்ளது.
திருவள்ளுவருக்கு கோவில் மைலாப்பூரில் உள்ளது.
கண்ணகிக்கு கேரளாவில் கோவில் உள்ளது.
துர்க்கைக்கு கூத்தனூரில் சரஸ்வதி கோவில் உள்ளது.
* இந்தியாவில் உள்ள மலைவாசஸ்தலங்களில் மிகவும் உயரமானது குல்மார்க் {காஷ்மீர்}.
* இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
* நமது நாட்டின் தேசிய இலக்கிய வரலாறு அருங்காட்சியகம் டில்லியில் அமைந்துள்ளது.
* ஒரு வாகனத்தை வேகமாக செலுத்த முடியும். விரைவே – விபத்துக்கு அடிகோலுகிறது. சாலை விதியில் சில வேக வரையறை செய்யப்பட்டுள்ளது. பஸ் 35 முதல் 60 கி.மீ. வேகத்தில் செல்லலாம். லாரி – டெம்போ 35 முதல் 60 கி.மீ. வேகத்தில் செல்லலாம். இதுவே சட்டப்படியான வரையறை.
* கர்நாடக மாநிலத்தில் அழகான நகர் மைசூர் பிருந்தாவனம் – அரண்மனை உள்ள நகர். இதன் முன் பெயர் ‘மகிஷாசுர நகர்’. இதுவே மருவி மைசூர் ஆனது. சாமுண்டீஸ்வரி கோவில் இங்குள்ளது. மகிஷாசூரனை தேவி அழித்த இடம் இது என்பதால் இப்பெயர் பெற்றது என்பது.
* கொல்காத்தவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்கள்தான் அதிகம்.
* ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் மரணம், ஒன்றரை கோடி பேர்கள் காயம் அடைகின்றனர். உலகில் அதிகம் சாலை விபத்து நடக்கும் நாடு இந்தியா. 7 நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து இங்கே நடக்கிறது.
* தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம் மேற்கு தொடர்ச்சிமலையில்.
* ஆரம்பத்தில் குருகுல முறைதான் இருந்தது. இரோப்பியர் வருகைக்குப் பின்புதான் பள்ளிகள் உருவாகின. முதல் பள்ளி கல்கத்தாவில் (கொல்கத்தா) தொடங்கப்பட்டது. இப்போதைய கல்விமுறை மெக்காலே பிரபுவால் உருவாக்கப்பட்டது. முதன் முதலில் சென்னை – பம்பாய் – கல்கத்தாவில் பல்கலைக்கழகம் உருவாகியது. பிறகு தமிழ்நாட்டில் அண்ணாமலை பல்கலைக் கழகம் உருவாகியது. காமராஜர் காலத்தில் தமிழ் நாட்டில் அதிக கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. மேற்குவங்கமும், கேரளமும் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளன.
* இந்திய நாட்டின் தேசியக்கனி மாம்பழம் ஆகும்.
* 'இந்தியாவின் விளையாட்டு மைதானம்' என அழைக்கப்படும் மாநிலம் காஷ்மீர்.
* 'பூந்தோட்ட நகரம்' என அழைக்கப்படுவது பெங்களூர்.
* 'அரண்மனை நகரம்' என அழைக்கப்படுவது கொல்கத்தா.
* உலகிலேயே மிதக்கும் பூங்கா மணிப்பூரில் உள்ளது. அது கெய்புல்லாம் ஜாவே என்ற தேசிய பூங்கா தான்.
* இந்தியாவிலுள்ள பாலைவனம் தார் பாலைவனம்.
* இந்தியாவின் முதல் தொலைபேசி நிலையம் கொல்கத்தாவில் உள்ளது.
* இந்திய மருத்துவத் துறையில் புகழ் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பி.சி.ராய் விருது.
* பால்வளப் பெருக்கம், வெண்மைப் புரட்சி எனப்படுகிறது. இந்தியாவில் பால்வளப் புரட்சிக்கு வித்திட்டவர் வர்கீஸ் குரியன் என்பவர். பசுமைப் புரட்சி உணவு உற்பத்தி. நீலப்புரட்சி கடல் வலப் பாதுகாப்பு.