ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்ட ரப்பர் பேண்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்ட ரப்பர் பேண்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்




நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய ரப்பர் பேண்ட் எலாஸ்டிக் பேண்ட், கம் பேண்ட், லாக்கி பேண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

நவீன ரப்பர் பட்டைகள் ஆங்கிலேயர் ஸ்டீபன் பெர்ரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் கண்டுபிடிப்பாளர். மார்ச் 17, 1845 இல் இங்கிலாந்தில் ஸ்டீபன் பெர்ரியால் ரப்பர் பேண்ட்டுக்கு காப்புரிமை பெறப்பட்டது.

 பெரும்பாலான ரப்பர் பேண்டுகள் இயற்கை ரப்பரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

ரப்பர் பேண்டுகளை அதிகம் பயன்படுத்துவது அமெரிக்க தபால் சேவை.


 இங்கு அஞ்சல்களை வரிசைப்படுத்தவும், குழுவாக வைக்கவும் ரப்பர் பேண்ட் பயன்படுத்தப்படுகிறது.

 அமெரிக்க தபால் சேவை 2021 இல் 1.2 பில்லியன் ரப்பர் பேண்டுகளை ஆர்டர் செய்தது. இது மொத்தம் 65,710 மைல்கள் அளவு கொண்டது.


 இதைக் கொண்டு நம்முடைய பூமியை 2.6 முறை சுற்றலாம். மேலும் செய்தித்தாள் விநியோக சேவைகளிலும் மலர் அலங்கார தொழிலிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ரப்பர் பேண்டுகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கும் போது நீண்ட காலம் பயன்படுத்தலாம்.


 குளிர்சாதன பெட்டியில் ரப்பர் பேண்ட்டை வைக்கும் போது அது பாலிமர்களை தளர்த்தும். இது பேண்ட் வழக்கம் போல் வேகமாக உடைந்து போகாமல் தடுக்கிறது.


ரப்பர் பேண்டுகள் போன்ற ரப்பர் கீற்றுகள் முதன்முதலில் மாயா இன மக்கள், ஆஸ்டெக்குகள், மெசோ அமெரிக்கர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன.

ரப்பர் பேண்டை வைத்து மிகப்பெரிய பந்தை தயாரித்து உலக சாதனை படைத்தவர் ஜோயல் வால்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமாக ரப்பர் பேண்ட்கள் விற்கப்படுகிறது.

.


Next Post Previous Post