Search This Blog

இயற்கை பற்றி Nature Facts



* துருவப் பிரதேசத்தில் கொசுக்கள் இல்லை.

* சூரியன் உதிக்கும் இடம் என்ற பெயர் இந்தோனேஷியாவைக் குறிக்கும்.

* அண்டார்டிகாவில் உள்ள பெரும்பாலான பனிப் பாறைகள் குடிப்பதற்கு தகுந்த சுத்தமான நீரால் உருவானவை.

* துறவிகள், சாமியார்கள் கையில் இருக்கும் திருவோடு எது தெரியுமா? தேங்காய் ஓடுதான். இது பெரிய தென்னையின் விதை. இது சிஷேல்ஸ் தீவில்தான் கிடைத்தன. இந்துமகா சமுத்திரத்தில் உள்ள பிரஸ்வின் என்ற தீவில் இவ்வகை மரங்கள் வளர்கின்றன. மரம் 100 ஆண்டுகள் வளர்ந்த பிறகே பூக்கும். காய் முற்றவே 10 ஆண்டுகள் ஆகும். அபூர்வ வகை கடல் தென்னை இது.

* உலகிலேயே மிக நீளமான ஆறு  'நைல் நதி' ஆகும். இதன் நீளம் 4,146 மைல்களாகும்.

* உலகில் வேகமாக வளரும் மலை நங்கபர்வதம் மலை.

* இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்.

* நிலவு சாதாரணமாக இருப்பதைவிட ஒன்பது மடங்கு பௌர்ணமியன்று அதிகமாக பிரகாசிக்கும்.

* மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் தொட்டபெட்டா.

* அமேசான் நதி தோன்றி 40 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

* தென்மேற்கு பருவக் காற்று வீசும் காலம் ஜீன் முதல் செப்டம்பர் வரை.

* வெனிசுலாவின் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல் 20 மடங்கு உயரமானது.

* ஆசியாவின் உயரமான மலை எவரெஸ்ட்.

* அமெரிக்காவில் மிகவும் வெப்பமான நகரம் அட்லாண்டா.

* நவம் என்றால் 9. வைரம், மரகதம், நீலம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புத்பராகம், வைடூரியம் இந்த ஒன்பதும் நவமணிகள் எனப்படும்.

* பூமியில் இருந்து பார்க்கும் போது வானவில் அரை வட்டமாகத் தெரிகிறது அல்லவா, இதை விமானத்தில் இருந்து பார்த்தால் முழு வட்டமாகத் தெரியும்.

* உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ளது. இதன் பெயர் ஏஞ்சல். உயரம் 3210 அடி. அகலத்தில் பெரியது. அமெரிக்காவில் உள்ள நயாகரா, உயரம் 167 அடி தான்.

* 'ஏழைகளின் ஆப்பிள்' என அழைக்கப்படுவது தக்காளி.

* உலகிலேயே மிகப் பழமையான பாறைகள் 3,500 மில்லியன் வருடங்களுக்கு முன்பே உண்டானவை. இவை அமெரிக்காவில் மின்னிசோடா ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உண்டானதாகும்.

* இந்தியாவில் நீண்ட பகல் கொண்ட நாள் ஜீன் 22.

* புல்லாங்குழலுக்கு ஒன்பது துளைகள் உண்டு.

* உலகிலேயே மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

* ஒரு மழை மேகத்தில் 6 டிரில்லியன் நீர்த்துளிகள் இருக்கும்.

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல்ஸ் நீர்வீழ்ச்சி.

* பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் அண்டார்டிகா.

* 'பசுமைப் புரட்சி' என்பது விவசாயத்தில் செய்யும் சாதனையைக் குறிக்கும்.

* உலகின் மிக நீண்ட மலைத்தொடர் மிட் அட்லாண்டிக் டிட்ஜ்.

* உலகில் மிக அதிக நீர்வரத்து உடைய நதி அமேசான்.

* ஆறு பருவங்களின் பெயர்கள் இளவேனிற் காலம், முதுவேனிற் காலம், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம்.

* நால்வகைப் பூக்கள் என்பது கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ, நிலப் பூ.

* ஆசியாவின் குளிர்ச்சியான பாலைவனம் கோபி பாலைவனம்.

* 1979 ஆகஸ்ட் 14-இல் இங்கிலாந்திலுள்ள வேல்ஸ் பகுதியில் கினைட் என்ற இடத்தில் காட்சியளித்த வானவில் மூன்று மணி நேரம் நீடித்தது. உலகிலேயே அதிக நேரம் நீடித்த வானவில் இதுதான்.

* உலகில் மிகப்பெரிய வெந்நீர் ஊற்று நியுசிலாந்தில் உள்ளது. அதன் பெயர் பெஹகுட்ரூ. இது 1500 அடி உயரம் கிளம்பிவிடும். எரிமலை உள்ள பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கும்.

* கப்பலின் மேல்தளத்தைக் கட்ட தேக்கு மரத்தைத் தவிர வேறு எந்த மரமும் பயன்படுத்தவதில்லை.

* ரிக்வேத கால ஆரியர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தனர்.

* ஜப்பானில் குட்டித் தீவுகள் 1000 உள்ளன.

* மேகங்கள் இரவு நேரத்தைக் காட்டிலும் பகலில் அதிக உயரத்தில் பறக்கின்றன.

* ஜப்பானிலுள்ள 'பியூஜியாமா' என்ற மலை காற்றில் வளைந்து கொடுக்கிறது.

* நயகரா நீர் வீழ்ச்சி பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும் மிகப்பெரிய நீர் வீழ்ச்சி அது. அந்த நீர் வீழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளாக ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக அதன் அடிப்பகுதியில் சுமார் 7 மைல் வரை பள்ளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அண்டார்டிக்கா முழுவதும் பனிப்பிரதேசம். இங்குள்ள இடம் முழுவதும் பனிக்கட்டியால் ஆனது என நமக்குத் தெரியும் ஆனால் அந்த கண்டத்தில் ஒரு பாம்பு, மற்றும் முதலை கூட கிடையாதாம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url