Search This Blog

தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison


தாமஸ் ஆல்வா எடிசன் -  Thomas Alva Edison

💡 உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

💡 தன்னுடைய சிறுவயதில் ஸ்கார்லெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் 8 வயதில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பிறகு மூன்றே மாதத்தில் பள்ளியை விட்டு நின்ற இவர்இ தன்னுடைய அம்மாவிடம் பாடம் கற்றார்.

💡 பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறுவயதில் இருந்தே இவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறார்.

💡 எடிசன் தன்னுடைய 11 வயதிற்குள் ரிச்சர்ட் பார்க்கர் தாமஸ் பெய்ன்இ சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை கற்றுத் தேர்ந்தார்.

💡 ரயில் நிலையத்தில் பணியாற்றிய போது 'கிராண்ட் டிரங்க் ஹெரால்ட்' வாரப் பத்திரிக்கையை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் அங்கேயே சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளை தொடங்கினார்.

💡 இவர் தன் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். மின்சார பல்பு எலக்ட்ரிக் ஜெனரேட்டர் எலக்ட்ரிக் ஃபேன் ரேடியோ வால்வு மெகா போன்இ மோட்டார் மின்சார இருப்புப்பாதை தொலைபேசி ஸ்பீக்கர் ஒலிபெருக்கி கிராமஃபோன் மூவி கேமரா ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

💡 ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகுஇ அதற்கான பாராட்டுக்களைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சி கூடத்திற்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால் 'நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என்பார்.

💡 இத்தனைக்கும் அறிவியல் கணிதம் என்று முறையாக எதையும் கற்காமல் உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கையில் சாதனை படைத்த எடிசன் 1931 ஆம் ஆண்டு மறைந்தார்.

💡 இவரது உடலை அடக்கம் செய்யும்போது அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் படி அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url