Search This Blog

கல்வி உளவியல் - மனித உடல்‌ வளர்ச்சி - Education Psychology

குழந்தை மேம்பாடும்‌ கற்பித்தல்‌ முறைகளும்‌

TNTET தாள்‌-1 பாடத்தொகுப்பு

 

மனித உடல்‌ வளர்ச்சி:

◆  உடல்‌ வளர்ச்சி என்பது மனித உடலில்‌ உள்ள செல்கள்‌ திசுக்களின்‌ பெருக்கத்தால்‌ ஏற்படும்‌ உயரம்‌ மற்றும்‌ எடை
பெருக்கத்தைக்‌ குறிக்கின்றது.

◆ மனித உடவின்‌ வளர்ச்சி மற்றும்‌ முதிர்ச்சி
ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ மனிதனின்‌
வளர்ச்சியை பின்வரும்‌ 8 பருவங்களாக
பிரிக்கலாம்‌.

1. சிசுப்‌ பருவம்‌ (0-1 ஆண்டுகள்‌)

2. குறுநடைப்‌ பருவம்‌ (1-3 ஆண்டுகள்‌)

3. பள்ளி முன்‌ பருவம்‌ (3-6 ஆண்டுகள்‌)

4. பள்ளிப்‌ பருவம்‌ (6-0 ஆண்டுகள்‌)

5. குமரப்‌ பருவம்‌ (70-20 ஆண்டுகள்‌)

6. வாலிபப்‌ பருவம்‌ (20-40 ஆண்டுகள்‌?

7. வாலிபப்‌ பருவத்திற்கும்‌ முதுமைப்‌
பருவத்திற்கும்‌ இடைப்பட்ட பருவம்‌
(40-60 ஆண்டுகள்‌)

8. முதுமைப்‌ பருவம்‌ (60 ஆண்டுகளுக்கு
மேல்‌)

◆ பள்ளிப்பருவம்‌ 3-6 ஆண்டுகளில்‌
குழந்தைகள்‌ முன்‌ மழலையர்‌ பள்ளியிலும்‌
6-0 ஆண்டுகளில்‌ தொடக்கப்‌ பள்ளியிலும்‌
கல்வி கற்கின்றனர்‌.

◆  நடுவண்‌ அரசும்‌ மாநில அரசும்‌ 14
ஆண்டுகள்‌ வரை உள்ள அனைத்துக்‌
குழந்தைகளுக்கும்‌ கட்டாய இலவசக்கல்வி (Universalisation of Elementary Education) 
அளிக்க வேண்டும்‌ என்று செயல்பட்டு வருகின்றன.

◆ பிறந்த குழந்தை சராசரியாக 50 செ.மீ
உயரமும்‌ 3 கிகி எடையும்‌ இருக்கிறது.

◆ உடல்‌ வளர்ச்சி முதலில்‌ தலையிலிருந்து
தொடங்கி பாதங்களை நோக்கி வருகின்றது.

◆ உடல்‌ வளர்ச்சியில்‌ எலும்புகளின்‌ வளர்ச்சியும்‌ தசை வளர்ச்சியும்‌ முக்கிய
காரணிகளாகும்‌.

◆  தொடக்கக்‌ கல்வி பயில பள்ளிக்கு வரும்‌ போது குழந்தையின்‌ நரம்பு மண்டலம்‌ 90
சதம்‌ வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

உடல்‌ உறுப்புகளின்‌ வளர்ச்சியைப்‌
பொருத்தவரை குழந்தை பள்ளிக்கு வரும்‌
வரை உடல்‌ உறுப்புகள்‌ வேகமாக வளர்ச்சி
அடைந்து 40% வளர்ச்சி நிறைவு
பெற்றிருக்கின்றது.



◆ பள்ளிப்‌ பருவம்‌ முதல்‌ குமரப்‌ பருவம்‌ தொடங்கும்‌ வரை குழந்தையின்‌ உடல்‌
வளர்ச்சி தேக்க நிலையை அடை கின்றது.
அதனைத்‌ தொடர்ந்து குமரப்பருவத்தில்‌
உடல்‌ வளர்ச்சியில்‌ அதிக வேகம்‌
காணப்படுகிறது.

◆ வளர்ச்சியானது குழந்தைகள்‌ பெற்றுள்ள
மரபுப்‌ பண்பு மற்றும்‌ சூழ்நிலையின்‌ தாக்கம்‌
இவற்றை பொறுத்து மாறுபடுகிறது.

◆ உடலின்‌ கட்டமைப்பு என்பதல்‌ மனித
உடலின்‌ செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தும்‌
மிக முக்கியமான இருபெரும்‌ அமைப்புகளான நாளமில்லாச்‌ சுரப்பிகள்‌
மண்டலமும்‌ நரம்பு மண்டலமும்‌ அடங்கும்‌.
இவை இரண்டும்‌ இணைந்து செயல்பட்டு
உடன்‌ வளர்சிதை மாற்றத்திற்கு காரணமாக
அமைகின்றன.

◆  நாளமில்லா சுரப்பிகள்‌ மனித உடலில்‌
பல்வேறு இடங்களில்‌ அமைந்து ஹார்‌மோன்கள்‌ என்னும்‌ வேதிப்பொருளைச்‌
சுரந்து உடல்‌ வளர்ச்சிக்கு நரம்புமண்டலத்துடன்‌ துணை நிற்கின்றது.

◆ பிட்யூட்ரியின்‌ முன்பகுதியிலிருந்து சுரக்கும்‌
வளர்ச்சி ஹார்மோன்‌ எலும்பு மற்றும்‌ தசை திசுக்களின்‌ வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது. இப்பகுதியில்‌ சுரக்கும்‌ பிற
ஹார்மோன்கள்‌ மற்ற நாளமிலாச்‌ சுரப்பிகளின்‌ செயல்பாட்டினைக்‌ கட்டுப்‌படுத்துகின்றன.

◆ பரிவு நரம்பு மண்டலத்தின்‌ செயல்பாட்டால்‌
அட்ரினல்‌ சுரப்பியின்‌ உட்பகுதி (medulla)
அட்ரினலின்‌ என்னும்‌ ஹார்மோனை
சுரந்து உடலானது அவசர காலங்களை
சமாளிக்க உதவுகின்றது.

◆ அட்ரினலின்‌ இதயத்தின்‌ செயல்பாட்டையும்‌,
இரத்த அழுத்தத்தையும்‌ கட்டுப்‌படுத்துவதுடன்‌ இரத்தக்குழாய்களும்‌, தசை
களும்‌ சுருங்கி விரிவதற்கு உதவுகின்றது.

◆  அட்ரினலின்‌ கார்போ ஹைட்ரேட்‌, புரோட்டின்‌ ஆகியவற்றின்‌ வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகின்றது.

◆ தைராய்டு சுரப்பியில்‌ சுரக்கும்‌ தைராக்ஸின்‌
ஆக்ஸிஜன்‌ உட்கிரகித்தலை அதிகப்படுத்‌துவதுடன்‌ வளர்சிதைமாற்றச்‌ செயலைக்‌ 
கட்டுப்படுத்துகின்றது. மேலும்‌ எலும்புகள்‌ 
மற்றும்‌ நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியையும் தூண்டுகிறது.


◆ பாரா தைராய்டு சுரப்பிகளில்‌ சுரக்கும்‌ ஹார்‌மோன்கள்‌ இரத்தத்தில்‌ உள்ள கால்சியம்‌
மற்றும்‌ பாஸ்பரஸ்‌ அளவினைக்‌ கட்டுப்‌படுத்தி எலும்பு வளர்ச்சியைத்‌ தூண்டுகிறது.

◆ கணையத்தில்‌ சுரக்கும்‌ இன்சுலின்‌ கார்போ
ஹைட்ரேட்‌, புரோட்டீன்‌, கொழுப்பு
ஆகியவற்றின்‌ வளர்சிதை மாற்றத்திற்கும்‌
குளுக்கோஸ்‌ உட்கிரகிக்கும்‌ அளவைக்‌
கட்டுப்படுத்தி புரோட்டீன்‌ உருவாவதற்கும்‌
கொழுப்பு சேகரிக்கவும்‌ பயன்படுகின்றது.

◆ குழந்தைப்‌ பருவத்தில்‌ பிட்யூட்ரியில்‌
முன்பகுதியில்‌ சுரக்கும்‌ வளர்ச்சி ஹார்மோன்‌
அளவுக்கு அதிகமாகச்‌ சுரக்குமானால்‌
அசாதாரண உடல்‌ பருமன்‌
உண்டாகும்‌.

◆  வளர்ச்சி ஹார்மோன்‌ தேவையான
அளவுக்குக்‌ குறைவாக சுரக்குமானால்‌
குள்ளத்தன்மை  ஏற்படுகின்றது.
குள்ளத்தன்மை குறைபாடுடைய
குழந்தைகள்‌ வளர்ச்சிக்‌ குன்றி எவ்வளவு வயது ஆனாலும்‌ உடல்‌ வளர்ச்சி அடையாமல்‌ இருப்பர்‌.

◆ குழந்தைகளிடத்தில்‌ தைராக்ஸின்‌ குறைவாக
சுரக்குமானால்‌ கிரிடினிசம்‌ 
ஏற்படும்‌. இக்குறைபாடுடைய குழந்தைகளின்‌
மைய நரம்பு மண்டலத்தின்‌ வளர்ச்சியில்‌ குறைபாடு ஏற்பட்டு குழந்தைகள்‌ உடல்‌ மற்றும்‌ உள்ள செயல்பாடுகளில்‌ மந்தமாக காணப்படுவர்‌.

◆  தைராக்ஸின்‌ அதிகமாக சுரக்குமானால்‌ முன்‌ கழுத்து கழலை என்னும்‌ நோய்‌ ஏற்படுகிறது. இந்நோய்‌ ஏற்பட்ட
குழந்தையின்‌ தைராய்டு சுரப்பி பருத்து முன்‌ கழுத்து பகுதி வீக்கம்‌ அடைந்து
காணப்படும்‌.

◆  நரம்பு மண்டலம்‌, மூளை, தண்டுவடம்‌
ஆகியவற்றைக்‌ கொண்ட மையநரம்பு
மண்டலம்‌, இவற்றிற்கு வெளியில்‌ உள்ள
நரம்பு திசுக்களைக்‌ கொண்ட வெளி நரம்பு
மண்டலம்‌ என்னும்‌ இரு பெரும்‌ பிரிவுகளைக்‌ கொண்டு இயங்குகின்றது.

◆ குழந்தையின்‌ வளர்ச்சியில்‌ முக்கிய பங்காற்றும்‌ மற்றொரு அடிப்படை
அமைப்பு நரம்பு மண்டலம்‌ ஆகும்‌. நரம்பு
மண்டலத்தின்‌ அடிப்படை அலகு நரம்பு செல்‌ அல்லது நியூரான்‌
எனப்படும்‌.

◆ நியூரான்களின்‌ செயல்பாட்டினைப்‌
பொறுத்து அவற்றை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்‌.

1. புலனுணர்ச்சி நியூரான்‌ Sensory neuron
2. இயக்க நியூரான்‌ motor neuron
3. இணைப்பு நியூரான்‌ inter nruron

◆ மெய்‌, வாய்‌, கண்‌: மூக்கு, செவி என்னும்‌
புலன்களில்‌ அமைந்து வெளியுலகத்‌திலிருந்து புலன்‌ உறுப்புகளின்‌ வாயிலாக
மைய நரம்பு மண்டலத்திற்குச்‌ செய்திகளைக்‌
கொண்டு செல்லும்‌ நியூரான்கள்‌
புலனுணர்ச்சி நியூரான்கள்‌ எனப்படும்‌. 

◆ மையநரம்பு மண்டலத்திலிருந்து
தசைகளுக்குக்‌ கட்டளைகளை கொண்டு செல்லும்‌ நியூரான்கள்‌ இயக்க நியூரான்கள்‌ எனப்படும்‌.

◆  புலன்‌ உணர்ச்சி நியூரான்களையும்‌ இயக்க
நியூரான்களையும்‌ இணைப்பது இணைப்பு நியூரான்கள்‌ எனப்படும்‌.

◆  மைய நரம்புமண்டலத்திலுள்ள 99.98%
நியூரான்கள்‌ இத்தகைய இணைப்பு நியூரான்களே.

◆  தூண்டல்களைப்‌ பெரும்‌ நியூரானின்‌ பாகம்‌ டென்டிரைட்‌  எனப்படும்‌. இவை
நியூரானின்‌ உடல்‌ பகுதியிலிருந்து பல நீட்சி
களாக காணப்படுகின்றன.

◆  நியூரானின்‌ உடல்‌ பகுதிக்கு சோமா  என்று பெயர்‌. இதனுள்‌ .உட்கருவும்‌
சைட்டோபிளாஸமும்‌ உள்ளன.

◆ சோமா டென்டிரைட்களிலிருந்து பெற்ற
செய்தியை ஒருங்கிணைத்து அதனை ஒரு தனித்த நீட்சியான  இழைக்குக்‌ கடத்துகின்றது. இந்த நீட்சியான இழைக்கு
ஆக்ஸான்‌ என்று பெயர்‌, இந்த
ஆக்ஸான்‌ எந்த நீளத்திற்கு நீண்டுள்னதோ அந்த நீளத்திற்கு செய்திகளைக்‌
கடத்துகின்றது.

◆ ஆக்ஸானைச்‌ சுற்றிலும்‌ மையலின்  ஷீத்‌ (myelin sheath)  ஒரு போர்வை போல
மூடியுள்ளது. இது புரதம்‌ மற்றும்‌
கொழுப்பால்‌ ஆனது. இது நரம்பு துடிப்புகளின்‌ வேகத்தை அதிகப்படுத்துவதற்கு
உதவுகின்றது.

◆ பிறந்த குழந்தையின்‌ நியூரான்களில்‌
மையலின்‌ ஷீத்‌ படலம்‌ இருப்பதில்லை.
குழந்தை வளர வளர மையலின்‌ ஷீத்‌ உருவாகின்றது. இந்நிகழ்ச்சிக்கு மையனேஷன்‌ (myelination) என்று பெயர்‌.

◆  புலன்‌ உணர்ச்சி நரம்புகளும்‌, இயக்க நரம்புகளும்‌ ஒருங்கிணைந்து செயல்பட
ஆரம்பிக்கின்றன. இதன்‌ விளைவாக அம்மா
என்னும்‌ சொல்லை குழந்தை திருத்தமாகவும்‌
எளிதாகவும்‌ கூறுகின்றது. இதனை. உடலியக்கச்‌ செயல்பாடு என்கிறோம்‌. இதற்கு ஏறக்குறைய ஓர்‌ ஆண்டு காலம்‌ ஆகின்றது.

◆ நாளமில்லாச்‌ சுரப்பிகளின்‌ செயல்பாடு மற்றும்‌ நரம்பு மண்டலத்தின்‌ வளர்ச்சியோடு
இணைந்து நடைபெறும்‌ குழந்தையின்‌ உடல்‌ வளர்ச்சியானது குழந்தையின்‌ உற்று நோக்கல்‌, தொடர்புபடுத்துதல்‌, சிந்தித்தல்‌
போன்ற மனச்செயல்பாடுகளின்‌
படவளர்ச்சிக்கும்‌ காரணமாக அமைகின்றது.
Next Post Previous Post
2 Comments
  • G. Krishnamurthy
    G. Krishnamurthy February 26, 2023

    2. குறுநடைப்‌ பருவம்‌ (1-3 ஆண்டுகள்‌)

    • இரா.விஜயராஜ்,  M.Sc, B.Ed (Mathematics), D.T.Ed.
      இரா.விஜயராஜ், M.Sc, B.Ed (Mathematics), D.T.Ed. February 26, 2023

      தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா, திருத்தி அமைத்துள்ளேன்

Add Comment
comment url