பிப்ரவரி 11 - அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம் - (International of women and girls in science)
பிப்ரவரி 11 - அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம் - (International of women and girls in science)
அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம் (International of women and girls in science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இத்தினம் ஐக்கிய நாடுகளின் பொது சபையால் 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
மகளிர் மற்றும் பெண்கள் அறிவியல் துறைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் பாலின சமத்துவத்தில் முழுமை அடைவதற்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையால் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஒரு நாடு தனது வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பாலின சமத்துவமும் அறிவியலும் முக்கியமானது என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.