பிப்ரவரி 1- இந்திய கடலோர காவல் படை தினம் | Indian Coast Guard Day
பிப்ரவரி 1- இந்திய கடலோர காவல் படை தினம்:
ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலோர காவல் படை தினம் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடற்படையிலிருந்து இந்திய கடலோர காவல் படை தனியாக கட்டமைக்கப்பட்டு 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியதை நினைவுகூறும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
சுருக்கமாக ஐசிஜி (ICG) எனப்படும் இந்திய கடலோர காவல் படையானது இந்திய கடல் எல்லைகளில் ஆண்டு முழுவதும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு அரசு அமைப்பாகும்.
மேலும் கடலோரப் பொருளாதார எல்லைக் கோட்டிற்குள் உள்ள பகுதிகளைக் கண்காணிப்பது சட்டவிரோத செயல்களை தடுப்பது கடலில் தத்தளிக்கும் மீனவா்களை மீட்பது வணிகக் கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்புகளை அளிப்பது உள்ளிட்டவற்றை இப்படை பிரிவு தொடா்ந்து செய்து வருகிறது.