Search This Blog

வரலாற்றில் இன்று | ஜனவரி – 11 - திருப்பூர் குமரன் நினைவு தினம்


 திருப்பூர் குமரன் நினைவு தினம் 

(அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932)

  • திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார்.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்.

இளமைப்பருவம்:

  • ஈரோடுமாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து – கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.
  • குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார்.
  • கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.

மறைவு:

  • 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம்மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url