வரலாற்றில் இன்று | ஜனவரி – 11 - லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 11
லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
(அக்டோபர் 2, 1904 – ஜனவரி 11, 1966)
- இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார்.
- இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
- சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார்.
- இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார்.
வரலாறு:
- லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார்.
- பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா.
- இவரின் தாயார் ராம்துல்லாரி தேவி. தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
இலக்கிய ஆர்வம்:
- லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.
- இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவர் எழுதிய நூலை முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்
மறைவு:
பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார்.